மாநில செய்திகள்

குட்கா வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுக்கு 20-ம் தேதி வரை நீதிமன்ற காவல் + "||" + Gudka case The court was up until 20th

குட்கா வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுக்கு 20-ம் தேதி வரை நீதிமன்ற காவல்

குட்கா வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுக்கு 20-ம் தேதி வரை நீதிமன்ற காவல்
குட்கா முறைகேடு வழக்கில் கைதான மாதவ ராவ் உட்பட 5 பேருக்கு செப்டம்பர் 20ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் அளித்து சென்னை சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #GutkhaScam
சென்னை,

குட்கா முறைகேடு வழக்கில் கைதான 5 பேருக்கும் செப்-20ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குட்கா ஆலை உரிமையாளர்கள் மாதவராவ், உமா சங்கர் குப்தா, சீனிவாசராவ் உள்ளிட்ட 5  பேரையும் நீதிமன்ற காவலில் சிறையிலடைக்க சென்னை சிபிஐ நீதிமன்ற நீதிபதி நீலபிரசாத் உத்தரவிட்டார். 

காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ மனு தாக்கல் செய்ய வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மனுதாரர்கள் சார்பில் ஜாமீன் மனுகோரி மனுதாக்கல் செய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. குட்கா வழக்கு தொடர்பாக சென்னை, தஞ்சை உள்ளிட்ட 3 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை
குட்கா வழக்கு தொடர்பாக சென்னை, தஞ்சை உள்ளிட்ட 3 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
2. குட்கா வழக்கின் விசாரணைக்காக முன்னாள் அமைச்சர் ரமணா சிபிஐ அலுவலகத்தில் ஆஜர்
குட்கா வழக்கின் விசாரணைக்காக முன்னாள் அமைச்சர் ரமணா சிபிஐ அலுவலகத்தில் ஆஜர் ஆனார்.
3. குட்கா ஊழல்: விசாரணைக்கு ஆஜராக அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் 5 பேருக்கு சிபிஐ சம்மன்
குட்கா ஊழல் வழக்கில் விசாரணைக்கு ஆஜராக அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் 5 பேருக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது.
4. குட்கா வழக்கில் விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சி.பி.ஐ. சம்மன்
குட்கா வழக்கில் விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பியுள்ளது.
5. குட்கா வியாபாரிகளிடம் இருந்து ‘உணவு பாதுகாப்பு துறை அதிகாரி மாதம் ரூ.2 லட்சம் லஞ்சம் வாங்கினார்’ ஐகோர்ட்டில் சி.பி.ஐ. வக்கீல் தகவல்
குட்கா வழக்கில் சிறையில் இருக்கும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி செந்தில் முருகன் மாதம் ரூ.2½ லட்சம் லஞ்சம் வாங்கியதற்கான ஆதாரம் உள்ளது என்று சென்னை ஐகோர்ட்டில் சி.பி.ஐ. தரப்பு வக்கீல் கூறினார். இதனால் அவருக்கு ஜாமீன் வழங்க முடியாது என நீதிபதி உத்தரவிட்டார்.