மாநில செய்திகள்

குன்றத்தூரில் குழந்தைகளை இழந்த விஜய்க்கு கட்சி பதவி + "||" + Vijay is the party's promoter

குன்றத்தூரில் குழந்தைகளை இழந்த விஜய்க்கு கட்சி பதவி

குன்றத்தூரில் குழந்தைகளை இழந்த விஜய்க்கு கட்சி பதவி
குன்றத்தூரில் குழந்தைகளை இழந்த விஜய், ரஜினி மக்கள் மன்ற ஒன்றிய இளைஞரணி இணைச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளதாக நிர்வாகி சுதாகர் அறிவித்துள்ளார். #Rajinikanth
சென்னை,

சென்னை குன்றத்தூரை சேர்ந்த தனியார் வங்கி ஊழியர் விஜயின் மனைவி அபிராமி கள்ளக்காதல் மோகத்தில் தனது 2 குழந்தைகளையும் ஈவு இரக்கமின்றி கொலை செய்த சம்பவம் கடும் அதிர்வலைகளை உருவாக்கி இருக்கிறது. அபிராமிக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என்று பல்வேறு தரப்பிலும் கோப குரல் ஒலித்து வருகிறது.

இந்த கடினமான மனநிலையை எதிர்கொள்ள முடியாமல் வங்கி ஊழியர் விஜய் மிகுந்த துயரத்தில் உள்ளார். ஆசையோடு வளர்த்த 2 பிள்ளைகளையும் பறிகொடுத்து கலங்கிப்போய் இருக்கிறார். அவருக்கு பலரும் நம்பிக்கையும், ஆறுதலும் கூறி வருகின்றனர்.

வங்கி ஊழியர் விஜய் நடிகர் ரஜினியின் தீவிர ரசிகர். இந்தநிலையில் நடிகர் ரஜினிகாந்த், வங்கி ஊழியர் விஜயை நேற்று தனது இல்லத்துக்கு வரவழைத்து ஆறுதல் கூறினார். அப்போது துக்கம் தாளாமலும், பேச முடியாமலும் விஜய் கண்ணீர்விட்டு கதறி அழுதார். ரஜினிகாந்த் அவரை தோளில் தட்டிக்கொடுத்து ஆசுவாசப்படுத்தினார்.

அப்போது, ‘சோதனையில் இருந்து மீண்டுவாருங்கள், ஆண்டவன் துணை இருப்பான்’, என்று விஜய்க்கு நடிகர் ரஜினிகாந்த் நம்பிக்கை ஊட்டினார்.

இந்தநிலையில்  குன்றத்தூரில் அபிராபி செய்த படுபாதக செயலால் குழந்தைகளை இழந்த விஜய், ரஜினி மக்கள் மன்ற ஒன்றிய இளைஞரணி இணைச் செயலாளராக நியமனம்  செய்யப்பட்டுள்ளதாக நிர்வாகி சுதாகர் அறிவித்துள்ளார்.