48 ஆண்டுகளாக நல்ல நண்பராக இருந்தவர் கருணாநிதி - பிரணாப் முகர்ஜி புகழாரம்


48 ஆண்டுகளாக நல்ல நண்பராக இருந்தவர் கருணாநிதி - பிரணாப் முகர்ஜி புகழாரம்
x
தினத்தந்தி 6 Sep 2018 4:22 PM GMT (Updated: 6 Sep 2018 4:22 PM GMT)

48 ஆண்டுகளாக நல்ல நண்பராக இருந்தவர் கருணாநிதி என்று முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார். #PranabMukherjee #Karunanidhi

சென்னை,

தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி உடல்நலக் குறைவால் கடந்த ஆகஸ்ட் மாதம் 7-ஆம் தேதி உயிரிழந்தார்.  அவரின் உடலுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.  இந்தநிலையில்,  சென்னையில் நடந்த தனியார் நிகழ்ச்சியில் முன்னாள் ஜனாதிபதி  பிரணாப் முகர்ஜி கலந்து கொண்டார். 

அப்போது சென்னையில் உள்ள  கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்துக்கு வருகை தந்தார். அவரை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கனிமொழி, துரைமுருகன் உள்ளிட்டோர் வரவேற்றனர். இதன் பின்   கருணாநிதியின் திருவுருவப் படத்திற்கு பிரணாப் முகர்ஜி அஞ்சலி செலுத்தினார்.

கோபாலபுரத்தில் பிரணாப் முகர்ஜி செய்தியார்களிடம் கூறியதாவது:

இந்தியாவின் மூத்த தலைவரான கருணாநிதி மறைவுக்கு, ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தேன்.  சிறந்த தலைவரான கருணாநிதியை இழந்து விட்டோம். கருணாநிதியின் இறுதிச் சடங்கில் பங்கேற்க முடியவில்லை. இதனால் கோபாலபுரம் இல்லத்தில் உள்ள கருணாநிதியின் திருவுருவப் படத்திற்கு அஞ்சலி செலுத்தினேன். பின்னர் ஸ்டாலின், கனிமொழி உள்பட அவரின் குடும்ப உறுப்பினருக்கு ஆறுதல் தெரிவித்தேன். 48 ஆண்டுகளாக நல்ல நண்பராக இருந்தவர் கருணாநிதி.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story