மாநில செய்திகள்

மதுரை மத்திய சிறைச்சாலை எஸ்.பிக்கு ரவுடி புல்லட் நாகராஜ் சினிமா பாணியில் ஆடியோ மூலம் கொலை மிரட்டல் + "||" + Madurai Central Prison SP Rowdy Bullet Nagaraj In cinematic style Murder threat by audio

மதுரை மத்திய சிறைச்சாலை எஸ்.பிக்கு ரவுடி புல்லட் நாகராஜ் சினிமா பாணியில் ஆடியோ மூலம் கொலை மிரட்டல்

மதுரை மத்திய சிறைச்சாலை எஸ்.பிக்கு ரவுடி புல்லட் நாகராஜ் சினிமா பாணியில் ஆடியோ மூலம் கொலை மிரட்டல்
மதுரை மத்திய சிறைச்சாலை எஸ்.பி. ஊர்மிளாவிற்கு, ரவுடி புல்லட் நாகராஜ் ஆடியோ மூலம் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
மதுரை

மத்திய சிறைச்சாலை எஸ்.பி. ஊர்மிளாவிற்கு, ரவுடி புல்லட் நாகராஜ் லாரி ஏற்றி கொலை செய்வோம் என ஆடியோ மூலம் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

மதுரை சிறைத்துறை எஸ்பி  ஊர்மிளாவிற்கு  பிரபல ரவுடி கொலை மிரட்டல் விடுத்த ஆடியோ, வாட்ஸ் அப்பில் வைரலாக பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே ஜெயமங்கலத்தை சேர்ந்தவர் புல்லட் நாகராஜன்.

பிரபல ரவுடியான இவர் மீது கொலை, கொள்ளை, வழிப்பறி என 30க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. இவரது அண்ணன் 2006ல் ஒரு கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் தூக்க மாத்திரைகளை அதிகம் கேட்டு சாப்பிட்டு வந்துள்ளார்.

கடந்த வாரம் சிறையில் சோதனைக்கு வந்த பெண் டாக்டரிடம் தனக்கு தூக்க மாத்திரைகள் அதிகம் தரும்படி வற்புறுத்தியுள்ளார். இதற்கு அவர் மறுத்ததால், ஆத்திரமடைந்த அவர் தனது சட்டையை கழற்றி டாக்டர் முகத்தில் வீசினார்.

இதுகுறித்து டாக்டர் புகாரில் சிறைத்துறை எஸ்பி ஊர்மிளா, சிறை கமாண்டோக்களை அனுப்பி அவரை அடித்து உதைத்தாக தெரிகிறது. இந்நிலையில் அன்றிரவே அவர் நன்னடத்தை விதி காரணமாக விடுதலை செய்யப்பட்டார்.

வெளியே வந்த அண்ணன், தம்பி புல்லட் நாகராஜனிடம் இந்த விஷயத்தை தெரிவித்துள்ளார். இதனால் கோபமடைந்த ரவுடி புல்லட் நாகராஜன், மதுரை சிறைத்துறை எஸ்பி ஊர்மிளா மற்றும் டாக்டருக்கு வாட்ஸ் அப் மூலம் கொலை மிரட்டல் விடுத்து பேசியுள்ளார்.

மதுரை ஜெயிலை பொருத்தவரை உனக்கு நிர்வாகத்திறமையே கிடையாது. அடிப்பதற்காகவே கமாண்டோ பார்ட்டிகளை வச்சுருக்கியா...? உன்னைய மாதிரி சிறையில் கைதியை அடிச்ச ஒரே காரணத்திற்காக, ஜெயிலர் ஜெயப்பிரகாஷை எரிச்சு கொன்னது ஞாபகமிருக்கும்.

பொம்பளையாக இருக்கீங்க, திருந்துங்க, இப்படி தொடந்து சிறைத்துறை எஸ்பிக்கு விடுக்கப்பட்டுள்ள கொலை மிரட்டல் வைரலாக பரவி வருவது சிறைத்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக பேசிய எஸ்பி ஊர்மிளா, 

ரவுடி நாகராஜை, தான் பார்த்த‌து கூட இல்லை; மிரட்டல் ஆடியோ தொடர்பாக சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளிக்க உள்ளேன் என கூறி உள்ளார்