மாநில செய்திகள்

புத்தகங்களுக்கு பதிலாக ஆயுதங்களைத் தூக்கும் மாணவர்கள் - முதல்வர் பழனிசாமி வேதனை + "||" + Instead of books Weapons lifting students Chief Minister Palanisamy

புத்தகங்களுக்கு பதிலாக ஆயுதங்களைத் தூக்கும் மாணவர்கள் - முதல்வர் பழனிசாமி வேதனை

புத்தகங்களுக்கு பதிலாக ஆயுதங்களைத் தூக்கும் மாணவர்கள் - முதல்வர் பழனிசாமி வேதனை
புத்தகங்களுக்கு பதிலாக மாணவர்கள் ஆயுதங்களைத் தூக்க வேண்டாம் எனக் கல்லூரி மாணவர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
சென்னை

சென்னைப் பல்கலைக்கழகத்தின் 160ஆண்டு நிறைவு விழாவில், பங்கேற்று பேசிய முதலமைச்சர் புத்தகங்களுக்கு பதிலாக மாணவர்கள் ஆயுதம் தூக்கும் சம்பவங்கள் வேதனையளிப்பதாக தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், கல்வி உதவித்தொகையில் தமிழகம் முதலிடம் வகிப்பதாகவும் முதலமைச்சர் பெருமிதத்துடன் கூறினார்.

சென்னை பல்கலைக்கழத்தில் டாக்டர் எம்.ஜி.ஆர் சமூக வளர்ச்சி ஆய்வு மையம் 5 கோடி மதிப்பில் அமைக்கப்படும் என்றும், அதன் மூலம் சமூக நலத்திட்டங்களான சத்துணவு, மகளிர் வளர்ச்சி, சுகாதாரம் உள்ளிட்டவை குறித்து ஆராய்ச்சி மேற்கொள்ளப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

இந்த நிகழ்ச்சியில் பல்கலைக்கழகத்தின் பல்வேறு துறைகளைச் சார்ந்த 12 பேராசிரியர்களுக்கு சிறந்த ஆரய்ச்சியாளர் விருதும், சிறந்த நிர்வாக அலுவலர் விருது வழங்கப்பட்டது. 572 மாணவர்களுக்கு பட்டம் மற்றும் பதக்கம் வழங்கி முதலமைச்சர் சிறப்பித்தார்.


தொடர்புடைய செய்திகள்

1. ராமசாமி படையாட்சியாருக்கு வெண்கல சிலையுடன் நினைவு மண்டபம்
கடலூரில் ரூ.2.15 கோடி செலவில் ராமசாமி படையாட்சியாருக்கு வெண்கல சிலையுடனான நினைவு மண்டபத்துக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார்.
2. தமிழகத்தில் எப்போது தேர்தல் வந்தாலும் அதை சந்திக்க அதிமுக தயாராக உள்ளது - முதலமைச்சர் பழனிசாமி
தமிழகத்தில் எப்போது தேர்தல் வந்தாலும் அதை சந்திக்க அதிமுக தயாராக உள்ளது என முதலமைச்சர் பழனிசாமி கூறினார். #AIADMK #EdappadiPalanisamy
3. தமிழகத்தில் பிரசவத்தின்போது தாய், சேய் இறப்பு விகிதம் குறைந்துள்ளது - முதல்வர் பழனிசாமி
எடப்பாடி அடுத்த கோனேரிப்பட்டியில் ஆரம்ப சுகாதார நிலையத்தை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்து பேசும் போது தமிழகத்தில் பிரசவத்தின்போது தாய், சேய் இறப்பு விகிதம் குறைந்துள்ளது என கூறினார்.
4. ஈரோடு மாவட்டத்தில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை எடப்பாடி பழனிசாமி இன்று பார்வையிடுகிறார்
ஈரோடு மாவட்டத்தில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று பார்வையிடுகிறார்.
5. அரசு பொருட்காட்சி தொடக்க விழா முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேச்சு
அரசியல் ரீதியாக குற்றச்சாட்டுகளை தவிர, அரசின் திட்டங்கள் மீது எந்த குறையும் சொல்லமுடியாது என்று சேலத்தில் நடந்த அரசு பொருட்காட்சி தொடக்க விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.