மாநில செய்திகள்

சிவகாசி : காக்கிவாடன்பட்டியில் பட்டாசு ஆலையில் வெடி விபத்து 3 பேர் பலி + "||" + Sivakasi: In Kakaviadanpatti At the fireworks plant Explosion 3 killed

சிவகாசி : காக்கிவாடன்பட்டியில் பட்டாசு ஆலையில் வெடி விபத்து 3 பேர் பலி

சிவகாசி : காக்கிவாடன்பட்டியில் பட்டாசு ஆலையில் வெடி விபத்து 3 பேர் பலி
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள காக்கிவாடன்பட்டியில் உள்ள பாட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்து 3 பேர் பலியாகி உள்ளனர்.
விருதுநகர்

நவம்பர் மாதம் தீபாவளி பண்டிகை  நெருங்கி வரும்  வேளையில் விருதுநகர் மாவட்டம் சிவகாசி மற்றும்   சுற்றுவட்டார பகுதிகளில் பட்டாசு உற்பத்தி  மிக வேகமாக நடந்து வருகிறது. இந்த நிலையில் சிவகாசி அருகே உள்ள காக்கிவாடன்பட்டியில் உள்ள ஒரு பட்டாசு ஆலையில் இன்று காலை பட்டாசு தயாரிக்கும் தொழிலில் அதிகமான தொழிலாளர்கள் ஈடுபட்டு இருந்தனர். பேன்சி ரக பட்டாசுகள் அங்கு தயாரிக்கப்பட்டு வந்தது. அப்போது உராய்வு காரணமாக திடீர் என வெடி விபத்து ஏற்பட்டது. இதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.  மேலும் பலர் காயம் அடைந்தனர். இதில் 2 பேர் கவலைக்கிடமான நிலையில் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.  

சம்பவ  இடத்தில்   தீயணைப்பு  படையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். சம்பவ இடத்திற்கு உயர் அதிகாரிகள்  விரைந்து உள்ளனர்.