மாநில செய்திகள்

மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையே தமிழக அமைச்சரவைக்கூட்டம் தொடங்கியது + "||" + The Tamilnadu Cabinet has begun

மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையே தமிழக அமைச்சரவைக்கூட்டம் தொடங்கியது

மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையே தமிழக அமைச்சரவைக்கூட்டம் தொடங்கியது
மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையே தமிழக அமைச்சரவைக்கூட்டம் முதல்-அமைச்சர் பழனிசாமி தலைமையில் தொடங்கியது.
சென்னை,

ராஜீவ் கொலை வழக்கில் சிறையிலுள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய ஆளுநருக்கு தமிழக அரசு பரிந்துரைக்கலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்த நிலையில் அதுகுறித்து ஆலோசிக்க தமிழக அமைச்சரவை கூட்டம் தலைமைசெயலகத்தில் தொடங்கியது.

முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் நடைபெறவுள்ள தமிழக அமைச்சரவை கூட்டத்தில் துணை முதல்-அமைச்சர் ஓ,பன்னீர் செல்வம், அமைச்சர்கள் பெஞ்சமின், தங்கமணி,  ஜெயக்குமார், காமராஜ், துரைக்கண்ணு, கடம்பூர் ராஜு  உள்ளிட்டோர் தலைமைச் செயலகம் வந்தனர்.

7 பேர் விடுதலை தொடர்பாக முக்கிய தீர்மானம் நிறைவேற்றப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.