குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்


குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்
x
தினத்தந்தி 10 Sep 2018 1:18 PM GMT (Updated: 10 Sep 2018 1:18 PM GMT)

குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


சென்னை,

குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை தெற்கு உள் கர்நாடகா முதல் தமிழகத்தின் தெற்கு பகுதியான குமரிக்கடல் வரை பரவி இருக்கிறது. மேலும் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி கர்நாடகாவின் தெற்கு பகுதி முதல் தமிழகம் ஊடாக உள்ளது.

குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை மற்றும் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி ஆகியவற்றின் காரணமாக தமிழகத்தில் நாளை முதல் 3 நாட்களுக்கு அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். உள் மாவட்டங்களான கிருஷ்ணகிரி, தர்மபுரி, காஞ்சீபுரம், வேலூர், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். சென்னை மற்றும் புறநகர் பகுதியில் லேசான மழை இரவு நேரத்தில் பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story