குற்றச்சாட்டு கூறுவதால் ஒருவர் குற்றவாளியாகி விட முடியாது: முதலமைச்சர் பழனிசாமி


குற்றச்சாட்டு கூறுவதால் ஒருவர் குற்றவாளியாகி விட முடியாது: முதலமைச்சர் பழனிசாமி
x
தினத்தந்தி 11 Sep 2018 5:44 AM GMT (Updated: 11 Sep 2018 5:44 AM GMT)

குற்றச்சாட்டு கூறுவதால் ஒருவர் குற்றவாளியாகிவிட முடியாது; குற்றத்தை நிரூபிக்க வேண்டும் என்று முதல் அமைச்சர் தெரிவித்தார்.

சென்னை,

சேலத்தில் முதல் அமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: பெட்ரோல், டீசல் மீதான மதிப்புக்கூட்டு வரியை மத்திய அரசுதான் குறைக்க வேண்டும்; தமிழக அரசு இது குறித்து பரிசீலிக்கும். மேகதாதுவில் எக்காரணத்தை கொண்டும் அணை கட்டக் கூடாது. 

எந்த துறையிலும் தவறு நடந்ததாக புகார் வரவில்லை. ஓட்டுக்கு பணம் கொடுப்பதாக வெளியான தகவல் தவறானது. தேர்தலில் பணம் கொடுப்பதும் குற்றம்; வாங்குவதும் குற்றம்; அப்படிப்பட்ட நிலையில் அதிமுக இல்லை” இவ்வாறு அவர் தெரிவித்தார். 


Next Story