மரங்களை வெட்டினால் 8 வழிச்சாலை திட்டத்துக்கு தடை விதிக்க நேரிடும் -சென்னை ஐகோர்ட் எச்சரிக்கை


மரங்களை வெட்டினால் 8 வழிச்சாலை திட்டத்துக்கு தடை விதிக்க நேரிடும் -சென்னை ஐகோர்ட் எச்சரிக்கை
x
தினத்தந்தி 11 Sep 2018 11:05 AM GMT (Updated: 11 Sep 2018 11:05 AM GMT)

சென்னை-சேலம் 8 வழிச்சாலை திட்டத்துக்காக மரங்களை வெட்டக்கூடாது என்ற உத்தரவை மீறினால் 8 வழிச்சாலை திட்டத்துக்கு தடை விதிக்க நேரிடும் என சென்னை ஐகோர்ட் எச்சரித்து உள்ளது.





சென்னை

சென்னை - சேலம் எட்டு வழிச்சாலை திட்டம் தொடர்பான பொதுநல வழக்கு சென்னை ஐகோர்ட்டில் நீதிபதிகள் சிவஞானம், பவானி சுப்பராயன் தலைமையிலான அமர்வு முன்னர் இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணைக்கு பின்னர் நீதிபதிகள் 8 வழிச்சாலைக்காக மரங்களை வெட்டப்படுவது எந்த சூழ்நிலையில் உள்ளது என்பது குறித்த அறிக்கையை அரசு தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.

மேலும், சமூக பாதிப்பு மதிப்பீட்டு ஆய்வு அறிக்கை எந்த நிலையில் உள்ளது? என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். 8 வழிச்சாலைக்கு மரங்களை வெட்ட கூடாது என்ற உத்தரவை மீறினால் மொத்த திட்டத்துக்கு தடை விதிக்க நேரிடும் எனவும் நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்தனர்.109 மரங்களை வெட்டியதற்கும் உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தனர்

சென்னை - சேலம் 8 வழிச்சாலை திட்டத்துக்கு ஏன் தடை விதிக்க கூடாது - தனியார் நிலத்தை உட்பிரிவு செய்து அரசு அளித்த அறிக்கையை சுட்டிக்காட்டி ஐகோர்ட்  நீதிபதிகள் கேள்வி விடுத்தனர்

சுற்றுச்சூழல் ஆய்வு அறிக்கையை வெள்ளிக்கிழமை தாக்கல் செய்வதாக ஐகோர்ட்டில்  மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.

Next Story