மாநில செய்திகள்

140–வது பிறந்தநாள்: பெரியார் சிலைக்கு 17–ந் தேதி மு.க.ஸ்டாலின் மரியாதை + "||" + MK Stalin's respect for the Periyar statue on 17th

140–வது பிறந்தநாள்: பெரியார் சிலைக்கு 17–ந் தேதி மு.க.ஸ்டாலின் மரியாதை

140–வது பிறந்தநாள்: பெரியார் சிலைக்கு 17–ந் தேதி மு.க.ஸ்டாலின் மரியாதை
140–வது பிறந்தநாள்: பெரியார் சிலைக்கு 17–ந் தேதி மு.க.ஸ்டாலின் மரியாதை
சென்னை, 

சென்னை மாவட்ட தி.மு.க. சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:–

தந்தை பெரியாரின் 140–வது பிறந்தநாளை முன்னிட்டு 17–9–2018 அன்று காலை 8 மணிக்கு அண்ணா சாலை, சிம்சன் அருகே உள்ள தந்தை பெரியார் சிலைக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், பொதுச்செயலாளர் க.அன்பழகன், பொருளாளர் துரைமுருகன் மற்றும் கழக முன்னணியினரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்கள்.

எனவே, கட்சியின் முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் – இந்நாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைக் கழகச் செயலாளர்கள், தலைமைச் செயற்குழு – பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்டக் கழக, பகுதிக் கழக, வட்டக் கழக நிர்வாகிகள், மாநகராட்சி மன்ற முன்னாள் உறுப்பினர்கள் மற்றும் அனைத்து அணி நிர்வாகிகள் மற்றும் தி.மு.க. தொண்டர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


ஆசிரியரின் தேர்வுகள்...