பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை விவகாரம்: தமிழக கவர்னர் உள்நோக்கத்துடன் செயல்படுகிறார் திருமாவளவன் குற்றச்சாட்டு


பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை விவகாரம்: தமிழக கவர்னர் உள்நோக்கத்துடன் செயல்படுகிறார் திருமாவளவன் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 14 Sep 2018 6:37 PM GMT (Updated: 14 Sep 2018 6:37 PM GMT)

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

சென்னை, 

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவரிடம், ‘முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை விவகாரம் குறித்து கவர்னர் பன்வாரிலால் புரோகித் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அறிக்கை அனுப்பி உள்ளது பற்றி நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு தொல்.திருமாவளவன் அளித்த பதில் வருமாறு:-

7 பேர் விடுதலை விவகாரத்தில் தமிழக கவர்னர் உள்நோக்கத்துடன் செயல்படுகிறார். எனவே தமிழக அரசு மீண்டும் அமைச்சரவையை கூட்டி கவர்னருக்கு பரிந்துரை செய்ய வேண்டும். அப்போது அவர் அதனை ஏற்று தான் ஆக வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story