மாநில செய்திகள்

7 பேர் விடுதலை விவகாரம்: தமிழர்களின் எதிர்பார்ப்பை ஆளுநர் நிறைவேற்றுவார் அமைச்சர் ஜெயக்குமார் + "||" + 7 People's Liberation Issue:The governor will fulfill the expectations of Tamils Minister Jayakumar

7 பேர் விடுதலை விவகாரம்: தமிழர்களின் எதிர்பார்ப்பை ஆளுநர் நிறைவேற்றுவார் அமைச்சர் ஜெயக்குமார்

7 பேர் விடுதலை விவகாரம்: தமிழர்களின் எதிர்பார்ப்பை ஆளுநர் நிறைவேற்றுவார் அமைச்சர் ஜெயக்குமார்
7 பேர் விடுதலை விவகாரத்தில் தமிழர்களின் எதிர்பார்ப்பை ஆளுநர் நிறைவேற்றுவார் என நம்பிக்கை உள்ளது என அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
சென்னை,

அண்ணாவின் 110-வது பிறந்தநாளையொட்டி சென்னை அண்ணா சாலையில் உள்ள அவரது சிலைக்கு கீழ் வைக்கப்பட்டுள்ள உருவப்படத்திற்கு முதலமைச்சர், துணை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.  பின்னர் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்வதில் அமைச்சரவை முடிவுக்கு உட்பட்டு ஆளுநர் நல்ல முடிவை எடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளது. அமைச்சரவை முடிவு எடுத்தது எடுத்ததுதான்; அதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை.

நேற்று, இன்று, நாளை என்று தங்களின் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்வதே திமுகவின் கொள்கை.

7 பேர் விடுதலை விவகாரம் அமைச்சரவை எடுக்கும் முடிவுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கியே ஆக வேண்டும். தமிழர்களின் எதிர்பார்ப்பை ஆளுநர் நிறைவேற்றுவார் என நம்பிக்கை உள்ளது என கூறினார்.

ஆசிரியரின் தேர்வுகள்...