செங்கோட்டை, தென்காசி, ஆகிய பகுதிகளில் 144 தடை உத்தரவு நீட்டிப்பு


செங்கோட்டை, தென்காசி, ஆகிய  பகுதிகளில் 144 தடை உத்தரவு நீட்டிப்பு
x
தினத்தந்தி 15 Sep 2018 3:08 PM GMT (Updated: 2018-09-15T20:47:38+05:30)

செங்கோட்டை, தென்காசி, ஆகிய வட்டங்களில் உள்ள பகுதிகளில் 144 தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் நேற்று முன்தினம் விநாயகர் சிலைகள் ஊர்வலத்தில் கலவரம் வெடித்தது. இதில் 10-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். 30-க்கும் மேற்பட்ட கார், மோட்டார் சைக்கிள், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டதால் போலீசார் குவிக் கப்பட்டனர். நேற்று 2-வது நாளாக அங்கு பதற்றம் நீடித்தது.

செங்கோட்டையில் ஏற்பட்ட பிரச்சினையை தொடர்ந்து, போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. தென்காசி, செங்கோட்டை ஆகிய தாலுகாக்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது.  இந்த தடை உத்தரவு நேற்று) முதல்  இன்று காலை 6 மணி வரை அமலில் இருக்கும் என அம்மாவட்ட ஆட்சியர் ஷில்பா கூறியுள்ளார்.

இந்தநிலையில்,  செங்கோட்டை, தென்காசி, ஆகிய வட்டங்களில் உள்ள பகுதிகளில் 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் என்று நெல்லை எஸ்.பி  அருண் சக்திகுமார் அறிவித்துள்ளார். 

இந்த 144 தடை உத்தரவு வரும் 22-ம் தேதி காலை வரை  அமலில் இருக்கும். மேலும் வெளியூர் நபர்கள் கலவரம் ஏற்படுத்தும் நோக்கத்துடன் வந்துள்ளனரா என தீவிரமாக விசாரணை செய்து வருகிறோம் எனக்கூறினார்.  

விநாயகர் சிலை ஊர்வலம் தொடர்பான பிரச்சனையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Next Story