மாநில செய்திகள்

அதிமுகவின் பலத்தை எதிர்க்கட்சியினருக்கு காட்டுவோம் அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் பழனிசாமி பேச்சு + "||" + We will show the strength of the electorate to the opposition

அதிமுகவின் பலத்தை எதிர்க்கட்சியினருக்கு காட்டுவோம் அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் பழனிசாமி பேச்சு

அதிமுகவின் பலத்தை எதிர்க்கட்சியினருக்கு காட்டுவோம் அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் பழனிசாமி பேச்சு
அதிமுகவின் பலத்தை எதிர்க்கட்சியினருக்கு காட்டுவோம் என்று அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் முதல்-அமைச்சர் பழனிசாமி கூறியுள்ளார்.
சென்னை,

காஞ்சிபுரத்தில் அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் பழனிசாமி பேசியதாவது:

சென்னையில் நடைபெறும் எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழாவில் அதிமுகவின் பலத்தை எதிர்க்கட்சியினருக்கு காட்டுவோம்.  காவிரி பிரச்சினைக்கு அதிமுக அரசு நல்ல தீர்ப்பை பெற்றுத் தந்துள்ளது.

அமைதிபூங்காவான தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு கெட்டு விட்டதாக ஸ்டாலின் பொய் பிரச்சாரம் செய்கிறார். 2007-ம் ஆண்டு திமுக நினைத்து இருந்தால் அப்போதே காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டிருக்கும்.  எம்.பி பதவி வேண்டும் என்ற காரணத்திற்காக காவிரி நீர் பிரச்சனையை கோட்டை விட்டது திமுக. தன் குடும்பத்தின் மீது மட்டுமே அக்கறை கொண்டது.  திமுக நாட்டு மக்கள் மீது அக்கறை கொள்ளவில்லை.

திமுகவின் தலைமை பதவியில் இருப்பவர்கள் அதிகார போதையில் உள்ளனர். குடும்பத்தை சார்ந்தவர்கள் மட்டுமே தொடர்ச்சியாக தலைமை பதவிக்கு வர முடியும்.  காஞ்சிபுரம் கீழ்கதிர்பூர் பகுதியில் ₨38 கோடியில் புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணி நடைபெற உள்ளது.  தமிழகத்தில் உயிர் காக்கும் ஆம்புலன்ஸ் வாகனத்தின் பயணநேரம் 11 நிமிடத்திலிருந்து 8 நிமிடமாக குறைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. 

இவ்வாறு அவர் பேசினார்.

ஆசிரியரின் தேர்வுகள்...