ரூ.495.87 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள 17 துணை மின் நிலையம் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்


ரூ.495.87 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள 17 துணை மின் நிலையம் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்
x
தினத்தந்தி 15 Sep 2018 10:00 PM GMT (Updated: 15 Sep 2018 7:56 PM GMT)

தமிழகத்தில் ரூ.495.87 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள 17 துணை மின் நிலையங்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

சென்னை, 

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

சென்னை போரூரில் ரூ.245.25 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 230/110-33 கி.வா. மற்றும் 110/11 கி.வா. (வளிமகாப்பு) துணை மின் நிலையத்தை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலிக் காட்சி மூலமாகத் திறந்து வைத்தார்.

மேலும், சென்னை சென்டிரல் துணை மின்நிலையம், விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணர், மதுரை மாவட்டம் ஏழுமலை, தர்மபுரி மாவட்டம் மாம்பட்டி, சோலைக்கொட்டாய், ஈரோடு மாவட்டம் சிவகிரி, கரூர் மாவட்டம் ரெங்கநாதபுரம்,

திருவண்ணாமலை மாவட்டம் அரையாளம், விழுப்புரம் மாவட்டம் ரெட்டணை, கடலூர் மாவட்டம் சிறுபாக்கம், வேலூர் மாவட்டம் கரிவேடு, திருநெல்வேலி மாவட்டம் ரஸ்தா, தஞ்சாவூர் மாவட்டம் இ.பி.காலனி, புதுக்கோட்டை மாவட்டம் பழைய கந்தர்வகோட்டை, வல்லவாரி, நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி என மொத்தம் ரூ.495.87 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 17 துணை மின் நிலையங்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

நிதித்துறை கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் உள்ளாட்சி நிதித் தணிக்கைத் துறை மற்றும் அரசுத் துறை நிறுவனத் தணிக்கைத் துறை ஆகிய துறைகளுக்கு 2014-15 மற்றும் 2015-16 ஆகிய ஆண்டுகளுக்கான நேரடி நியமன உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாக தேர்வு செய்யப்பட்ட 215 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 7 பேருக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story