சென்னையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சிலைகள் கரைப்பு


சென்னையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சிலைகள் கரைப்பு
x
தினத்தந்தி 16 Sep 2018 8:19 AM GMT (Updated: 16 Sep 2018 8:19 AM GMT)

சென்னையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டு வருகின்றன. #Chennai #GaneshChaturthi2018

சென்னை, 

கடந்த 13-ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. சென்னையில் மொத்தம் 2520 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க அனுமதி வழங்கப்பட்டது. இந்த விநாயகர் சிலைகள் 5 நாட்களுக்கு வழிபாடு நடத்தப்பட்டு பின்னர் கடலில் கரைக்கப்படுவது வழக்கம்.

சென்னையில் எண்ணூர், காசிமேடு, திருவொற்றியூர், பட்டினப்பாக்கம் மற்றும் நீலாங்கரை ஆகிய 5 இடங்களில் விநாயகர் சிலைகளை இன்றும், நாளையும் கரைக்க போலீசார் அனுமதி வழங்கியுள்ளனர். அதன்படி, இன்று காலை 10 மணி முதலே விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டு வருகின்றன. சென்னையில் விநாயகர் சிலை கரைக்கும் பகுதிகளில் சுமார் 20,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க முக்கியமான சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சிலைகளை கரைக்க 2 ராட்சஷ கிரேன்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும் தமிழகம் முழுவதும் 1 லட்சம் இடங்களில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகள், அந்தந்த கடற்கரைப்பகுதிகளில் கரைக்கப்பட்டு வருகின்றன.  

Next Story