தமிழிசையிடம் பெட்ரோல் விலை குறித்து கேள்வி எழுப்பிய ஆட்டோ டிரைவர் மீது தாக்கு!


தமிழிசையிடம் பெட்ரோல் விலை குறித்து கேள்வி எழுப்பிய ஆட்டோ டிரைவர் மீது தாக்கு!
x
தினத்தந்தி 17 Sep 2018 2:04 PM GMT (Updated: 17 Sep 2018 2:04 PM GMT)

பா.ஜனதா தலைவர் தமிழிசையிடம் பெட்ரோல் விலை குறித்து கேள்வி எழுப்பிய ஆட்டோ டிரைவரை பா.ஜனதாவினரை தாக்கிய விவகாரம் சர்ச்சையாகியுள்ளது.




சைதாப்பேட்டையில் விநாயகர் சதுர்த்தி நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர் தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவருக்கு பின்னால் இருந்த ஆட்டோ டிரைவர் கதிர், 'பெட்ரோல் விலை இப்படி உயர்ந்துகொண்டே போகிறதே' என்று கேள்வியை எழுப்பினார். அப்போது தமிழிசை கேட்டும் கேட்காததுபோல சிரிக்கிறார். ஆட்டோ டிரைவர் மீண்டும் கேள்வியை எழுப்பிய போது தமிழிசை பின்னால் இருந்தவர் அவரை முழங்கையால் தாக்கினார். இதனையடுத்து பா.ஜனதா தொண்டர்கள் ஆட்டோ டிரைவர் கதிரை சரமாகியாக தாக்கியுள்ளனர். 

கதிர் பேசுகையில், பெட்ரோல் விலை உயர்வால் ஒரு ஆட்டோ டிரைவராக நான் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளேன், ஆனால் அவர்கள் தவறாக எடுத்துக்கொண்டு என்ன தாக்கினார்கள். இதுதான் அங்கு நடந்தது. சாப்பிடவும், பிற செலவுக்கும் எங்களுக்கு ரூ. 500 தேவைப்படுகிறது. ஆனால் பெட்ரோல் விலை உயர்ந்துக்கொண்டே செல்வதால் பெட்ரோல் செலவு போக 300 ரூபாய்தான் கிடைக்கிறது,” பெட்ரோல் விலை குறித்து கேட்டால் வயதானவன் என்றுகூட பார்க்காமல் அடிக்கிறார்கள் என வேதனையுடன் கூறியுள்ளார்.  

 இதற்கிடையே பெயரை வெளியே தெரிவிக்க விரும்பாத பா.ஜனதா தலைவர் என்.டி.டி.விடம் பேசுகையில், “ஆட்டோ டிரைவர் எழுப்பிய விதம், குடித்துவிட்டு கேள்வி எழுப்புகிறார் என எங்களுடைய தொண்டர்களை நினைக்க செய்துள்ளது. அவரை அங்கிருந்து வெளியேற்ற மட்டும் செய்தார்கள், ஆனால் அடிக்கவில்லை,” என கூறியுள்ளார். 


Next Story