கோவில் அர்ச்சகர்கள் தெய்வீகமாக பணியாற்றவில்லை இயந்திர தன்மையுடன் பணியாற்றுவதாக சென்னை ஐகோர்ட் கண்டனம்


கோவில் அர்ச்சகர்கள் தெய்வீகமாக பணியாற்றவில்லை இயந்திர தன்மையுடன் பணியாற்றுவதாக சென்னை ஐகோர்ட் கண்டனம்
x
தினத்தந்தி 18 Sep 2018 6:41 AM GMT (Updated: 18 Sep 2018 6:41 AM GMT)

கோவில் அர்ச்சகர்கள் தெய்வீகமாக பணியாற்றவில்லை என்றும் இயந்திர தன்மையுடன் பணியாற்றுவதாகவும் சென்னை ஐகோர்ட் கண்டனம் தெரிவித்துள்ளது.

சென்னை

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் புன்னை வடநாதர் சன்னதியில் காணாமல் போன மயில் சிலைக்கு பதில் புதிய சிலை அமைத்து கும்பாபிஷேகம் நடத்த உத்தரவிடக்கோரி சென்னை ஐகோர்ட்டில்  பொது நல வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு அடங்கிய அமர்வு, கோவிலில் சிலைகளை பாதுகாப்பதில் அர்ச்சகர்களுக்கு பொறுப்பு உண்டு என்று தெரிவித்துள்ளனர்.

மேலும்,  கோவில் அர்ச்சகர்கள் தெய்வீகமாக பணியாற்றவில்லை, இயந்திர தன்மையுடன் பணியாற்றுவதாக சென்னை ஐகோர்ட்  நீதிபதிகள்,  கருத்து தெரிவித்து உள்ளனர். 

மேலும் இதுகுறித்து 4 வாரத்தில் பதிலளிக்க இந்து சமய அறநிலையத்துறைக்கு சென்னை ஐகோர்ட்  உத்தரவிட்டு உள்ளது.

Next Story