சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை


சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை
x
தினத்தந்தி 19 Sep 2018 1:51 AM GMT (Updated: 19 Sep 2018 1:51 AM GMT)

சென்னையில் இன்று பெட்ரோல் விலை நேற்றைய விலையிலிருந்து எந்த மாற்றமுமின்றி ரூ.85.41 ஆக விற்பனை செய்யப்படுகிறது. #PetrolPrice

சென்னை,

பெட்ரோல், டீசல் விலையை தினசரி நிர்ணயம் செய்வது கடந்த ஆண்டு ஜூன் மாதம் 16-ந்தேதி முதல் நடைமுறைக்கு வந்தது. அந்த நடைமுறை வந்ததில் இருந்து பெட்ரோல், டீசல் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது.

தினசரி கட்டணம் நிர்ணயம் நடைமுறைக்கு வந்த போது ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 68 ரூபாய் 02 காசுகள் என்றும், டீசல் விலை 57 ரூபாய் 41 காசுகள் என்றும் இருந்தது. அதன் தொடர்ச்சியாக பெட்ரோல், டீசல் விலை எகிற தொடங்கியது. சென்னையில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை, 10 காசுகள் உயர்ந்து ரூ.85.41 ஆகவும் டீசல் 10 காசுகள் உயர்ந்து 78.10 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று எந்த மாற்றமுமின்றி அதே விலையில் விற்பனை செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கடந்த இரண்டு வாரமாக பெட்ரோல் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து வருகிறது. தொடர் விலை ஏற்றத்தை வைத்து பார்க்கும் போது இன்னும் சில வாரங்களில் பெட்ரோல் விலை ரூ.100-ஐ நெருங்கிவிடுமோ? என வாகன ஓட்டிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.

இது ஒருபுறம் இருக்க, பெட்ரோல், டீசல் விலை உயர்வால், அனைத்து விதமான போக்குவரத்து கட்டணங்களும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக காய்கறி ஏற்றி வரும் லாரிகள் ஏற்கனவே தங்களுடைய வாடகை கட்டணத்தை உயர்த்திவிட்டனர். ஆனாலும் வியாபாரிகள் இன்னும் காய்கறி விலையில் மாற்றம் செய்யவில்லை. எப்போது வேண்டுமானாலும் காய்கறி விலை அதிகரிக்கலாம் என்று அவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story