மாநில செய்திகள்

வங்கக்கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் -வானிலை ஆய்வு மையம் + "||" + Because the Bengal tragedy is seen Fishermen do not go for fishing Weather Research Center

வங்கக்கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் -வானிலை ஆய்வு மையம்

வங்கக்கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் மீனவர்கள் மீன்பிடிக்க  செல்ல வேண்டாம் -வானிலை ஆய்வு மையம்
வங்கக்கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் செல்ல வேண்டாம் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னை:

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மத்திய வங்கக்கடல் பகுதியில் நிலவி வந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நேற்று குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது.

இந்நிலையில் இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வங்கக்கடல் சீற்றத்துடன் காணப்படும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது. இதன் காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது. கடலில் 45 முதல் 55 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசும் என்றும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

பலத்த காற்று வீசும் என்பதால் அந்தமான் மற்றும் தெற்கு மத்திய வங்கக்கடல் பகுதிக்கு 19, 20 ஆகிய தேதிகளிலும், ஆந்திரா மற்றும் மத்திய வங்கக்கடல் பகுதிக்கு 19, 20, 21 ஆகிய தேதிகளிலும் செல்ல வேண்டாம் என மீனவர்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அடுத்த இரு தினங்களுக்கு வடதமிழகத்தில் ஒருசில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு  உள்ளது என சென்னை  வானிலை மையம் அறிவித்துள்ளது.