கோவையில் தனியார் கல்லூரி நிர்வாகி, பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை


கோவையில் தனியார் கல்லூரி நிர்வாகி,  பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை
x
தினத்தந்தி 20 Sep 2018 10:20 PM GMT (Updated: 20 Sep 2018 10:20 PM GMT)

கோவையில் தனியார் கல்லூரி நிர்வாக இயக்குநரின் பாலியல் தொல்லை தாங்க முடியவில்லை என வாட்ஸ் ஆப்பில் பெண் ஒருவர் கருத்துகளை பரிமாறி உள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



கோவை

கோவையை அடுத்த சரணவம்பட்டியைச் சேர்ந்தவர் கவிதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). 23 வயதான இவர் அதே பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் அலுவலக பணியாளராக பணிபுரிந்து வந்தார். இந்த கல்லூரியின் நிர்வாக இயக்குநர்  அவருக்கு வயது 64. இவர் அலுவலகத்தில் பணிபுரியும் இளம்பெண்களை பின்னால் சென்று கட்டிபிடிப்பதும், முத்தம் கொடுப்பதுமாக இருந்து வந்துள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளாகவே அங்கு பணிபுரிந்த பல பெண்களிடம் பாலியல் ரீதியாக பல்வேறு தொல்லைகள் செய்துள்ளார்.

 பணிக்கு வரும் இளம் பெண்கள் பலர் இவரது பாலியல் தொந்தரவு பொறுக்க முடியாமல் வேலையை விட்டு சென்றுள்ளனர். குடும்ப சூழ்நிலை காரணமாக கடந்த இரண்டு வருடமாக பணிபுரிந்து வரும் கவிதாவுக்கு பலமுறை பாலியல் ரீதியான தொந்தரவுக்கு ஆளாகி உள்ளார். 

இந்நிலையில் இதுகுறித்து கவிதா  நிர்வாக இயக்குநரின் மகனும் கல்லூரியின் தலைமை நிர்வாகிக்கு  வாட்ஸ் ஆப் மூலம் புகார் அனுப்பியுள்ளார். அதில் சார் உங்கள நம்பிதான் எம்டி சார் கொடுத்த செக்ஸ் டார்ச்சர மறச்சிட்டு அமைதியாக இருந்தேன்.

நேத்து கூட நீங்க பேசும் போது வீடியோல இருக்கிறது நான் இல்லைனு சொல்ல சொன்னீங்க. எனக்கு ஏதாச்சும் ஆச்சுனா நீங்களும் எம்டி சாரும்தான் காரணம். என்னால் முடியலை. நான் இருக்கிறது பிரயோஜனம் இல்லை என்று அனுப்பியுள்ளார்.

இதற்கு அவர்  பதில் அளிக்கையில் இத்தனை நாட்களாக நீங்கள் எதையும் சொல்லவில்லை. நான் உங்களிடம் அதுபோல் நடந்து கொள்ளவும் சொல்லவில்லை. கொஞ்ச நாட்களுக்கு முன்னர் கூட நீங்களும் நானும் பேசி கொண்டிருந்த போது இங்கு பணியாற்றுவது மகிழ்ச்சியாக உள்ளதாகவே கூறியுள்ளீர்கள்.

எதுவாக இருந்தாலும் என்னை நேரில் சந்தித்து உங்கள் குறைகளை கூறுங்கள். உங்கள் பிரச்சினையை நான் சரி செய்கிறேன். உங்கள் மெசேஜை பார்த்ததும் அதிர்ச்சியாக உள்ளது என்று நளின் அனுப்பியுள்ளார்.

Next Story