ஸ்டெர்லைட் ஆலையில் மீண்டும் ஆய்வு தேசிய பசுமை தீர்ப்பாய நிபுணர் குழு தலைவர் தருண் அகர்வால் பேட்டி


ஸ்டெர்லைட் ஆலையில் மீண்டும் ஆய்வு தேசிய பசுமை தீர்ப்பாய நிபுணர் குழு தலைவர் தருண் அகர்வால் பேட்டி
x
தினத்தந்தி 23 Sep 2018 2:14 PM GMT (Updated: 23 Sep 2018 2:14 PM GMT)

தேவைப்பட்டால் ஸ்டெர்லைட் ஆலையில் மீண்டும் ஆய்வு மேற்கொள்ளப்படும் என்று சென்னையில் தேசிய பசுமை தீர்ப்பாய நிபுணர் குழு தலைவர் தருண் அகர்வால் கூறியுள்ளார்.

சென்னை,

சென்னையில் தேசிய பசுமை தீர்ப்பாய நிபுணர் குழு தலைவர் தருண் அகர்வால் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தேவைப்பட்டால் ஸ்டெர்லைட் ஆலையில் மீண்டும் ஆய்வு மேற்கொள்ளப்படும். ஸ்டெர்லைட் விவகாரம் தொடர்பாக சென்னையில் நாளை மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் தமிழக அரசு அதிகாரிகள் உள்ளிட்டோரை சந்திக்க உள்ளேன். 

அனைத்து தரப்பு கருத்துக்களையும் முழுமையாக கேட்டறிந்த பின், பசுமை தீர்ப்பாயத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்படும். ஸ்டெர்லைட் ஆலை, கிராமங்கள், கழிவு கொட்டப்பட்ட இடங்களில் ஆய்வு நடத்தப்பட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story