மாநில செய்திகள்

பள்ளிக்கூட பஸ்சில் அவசரக்காலக் கதவு வழியாக தவறி விழுந்த 4 வயது சிறுமி ; கை முறிந்தது + "||" + School bus Emergency door through 4 year old girl falls apart

பள்ளிக்கூட பஸ்சில் அவசரக்காலக் கதவு வழியாக தவறி விழுந்த 4 வயது சிறுமி ; கை முறிந்தது

பள்ளிக்கூட பஸ்சில் அவசரக்காலக் கதவு வழியாக தவறி விழுந்த 4 வயது சிறுமி ; கை முறிந்தது
தனியார் பள்ளிப் பேருந்தின் அவசரக்காலக் கதவு வழியாக 4 வயதுச் சிறுமி தவறி விழுந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் மங்கலம் தனியார்  பள்ளிப் பேருந்தின் அவசரக்காலக் கதவு வழியாக 4 வயதுச் சிறுமி தவறி விழுந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கீழ்பெண்ணாத்தூர் அருகே நம்மியேந்தலைச்  சேர்ந்த கதிர்வேல் என்பவரின் 4 வயது மகள் லட்சியா. லட்சியா   மங்கலத்தில் உள்ள மெட்ரிக்குலேசன் பள்ளியில் மழலையர்ப் பிரிவில் படித்து வந்தார். இன்று பள்ளிப் பேருந்தில் சென்ற லட்சியா சோமாசிபாடி என்ற இடத்தில் பேருந்தின் அவசரக்காலக் கதவு வழியே வெளியில் விழுந்தார். இதில் வலக்கையில் முறிவு ஏற்பட்ட நிலையில் திருவண்ணாமலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் கீழ்பெண்ணாத்தூர் காவல்துறையினர் பள்ளிப் பேருந்தைப் பறிமுதல் செய்து ஓட்டுநர் வீரமணியிடம் விசாரணை நடத்தினர். தனியார் பள்ளியில் தொடர்ந்து கட்டிட பணிகள் நடைபெற்று வருகின்றன.  கட்டடத்தின் பின்புறம் ஐம்பதடி ஆழக் கிணறு திறந்தே உள்ளது. இத்தகைய ஆபத்தான நிலையில் கட்டடத்தில் பள்ளி நடத்த அனுமதிக்கப்பட்டது எப்படி என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. திருவண்ணாமலை மாவட்டத்தில் 1¾ லட்சம் பேர் பயன்பெறுகிறார்கள்: விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கும் திட்டம் - அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்
மாவட்டம் முழுவதும் 1¾ லட்சம் விவசாயிகள் பயன்பெறும் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கும் திட்டத்தை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்.
2. திருவண்ணாமலை மாவட்டத்தில் 9 தொழிற்சங்கத்தினர் வேலைநிறுத்தத்தால் வங்கி பணிகள் முடங்கின - ரூ.700 கோடி பண பரிவர்த்தனை பாதிப்பு
9 தொழிற்சங்கத்தினரின் வேலைநிறுத்தத்தால் வங்கி பணிகள் முடங்கின. அதன் காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் ரூ.700 கோடி பண பரிவர்த்தனை பாதிக்கப்பட்டது.
3. திருவண்ணாமலை மாவட்டத்தில் பெருமாள் கோவில்களில் வைகுண்ட ஏகாதசி விழா - திரளான பக்தர்கள் தரிசனம்
திருவண்ணாமலை மாவட்டத்தில் பெருமாள் கோவில்களில் வைகுண்ட ஏகாதசி விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
4. திருவண்ணாமலை மாவட்டத்தில் சர்கார் பட பேனர்கள் கிழிப்பு - சினிமா காட்சிகள் ரத்து
திருவண்ணாமலை மாவட்டத்தில் சர்கார் பட பேனர்கள் கிழிக்கப்பட்டதுடன், சினிமா காட்சிகளும் ரத்து செய்யப்பட்டன.