மாநில செய்திகள்

இன்று பிற்பகல் மு.க.ஸ்டாலின் வீடு திரும்புவார் - அப்போலோ மருத்துவமனை + "||" + MK stalin home in the afternoon Apollo Hospital

இன்று பிற்பகல் மு.க.ஸ்டாலின் வீடு திரும்புவார் - அப்போலோ மருத்துவமனை

இன்று பிற்பகல் மு.க.ஸ்டாலின் வீடு திரும்புவார் - அப்போலோ மருத்துவமனை
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வலதுபக்க கால் தொடையில் சிறிய அளவில் அறுவை சிகிச்சை. இன்று பிற்பகல் மு.க.ஸ்டாலின் வீடு திரும்புவார்.
சென்னை,

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்  சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் நேற்று இரவு அனுமதிக்கப்பட்டார்.

ஸ்டாலினுக்கு  சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன. தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளது. இன்று ஸ்டாலின் வீடு திரும்புவார் என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

அப்போலோ மருத்துவமனை வெளியிட்டு உள்ள தகவலில் கூறி இருப்பதாவது:-

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வலதுபக்க கால் தொடையில் இருந்த நீர்க்கட்டியை அகற்ற சிறிய அளவில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இன்று பிற்பகல் மு.க.ஸ்டாலின் வீடு திரும்புவார் என கூறி உள்ளது.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அப்போலோ மருத்துவமனை சென்று ஸ்டாலினின் உடல் நிலை குறித்து நேரில் விசாரித்தார். பின்னர் அவர் கூறும் போது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நலமுடன் உள்ளார். வெகுவிரைவில் வீடு திரும்புவார் என கூறினார்.