மாநில செய்திகள்

வரிஏய்ப்பு செய்ததால்நடிகர் விஜய் சேதுபதி அலுவலகத்தில் வருமானவரித்துறை சோதனை + "||" + Income Tax Department in Vijay Sethupathi's Office

வரிஏய்ப்பு செய்ததால்நடிகர் விஜய் சேதுபதி அலுவலகத்தில் வருமானவரித்துறை சோதனை

வரிஏய்ப்பு செய்ததால்நடிகர் விஜய் சேதுபதி அலுவலகத்தில் வருமானவரித்துறை சோதனை
நடிகர் விஜய் சேதுபதி அலுவலகத்தில் வருமானவரித்துறை சோதனை நடத்தினர்.
சென்னை, 

‘தர்மதுரை’, ‘நானும் ரவுடி தான்’ உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்தவர் நடிகர் விஜய் சேதுபதி. இவர் கடந்த காலங்களில் வருமானவரி ஏய்ப்பு செய்ததாக கூறப்படுகிறது.

அதனடிப்படையில் வளசரவாக்கத்தில் உள்ள அவருடைய அலுவலகத்துக்கு வருமானவரித்துறை அதிகாரிகள் சென்றனர். அங்கு அவர் இல்லாததால், அவருடைய அலுவலக ஊழியர்களிடம் விசாரணை நடத்தினார்கள். ஒரு சில ஆவணங்களையும் பெற்று சென்று உள்ளதாக கூறப்படுகிறது.

பின்னர் கீழ்ப்பாக்கத்தில் உள்ள அவருடைய வீட்டுக்கு வருமானவரித்துறை அதிகாரிகள் சென்றனர். அப்போது அவருடைய வீட்டின் அருகில் உள்ளவர்கள், அவர் வெளியூர் சென்றிருப்பதால் வீட்டில் எவரும் இல்லை என்று கூறி உள்ளனர். அதனடிப்படையில் வருமானவரித்துறை அதிகாரிகள் திரும்பி சென்றனர்.

இதுகுறித்து வருமானவரித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

நடிகர் விஜய் சேதுபதி வருமானவரி ஏய்ப்பு செய்தது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக அவருடைய அலுவலக ஊழியர்களிடம் விசாரணை நடத்தினோம். அதில் சில ஆவணங்களையும் பறிமுதல் செய்து உள்ளோம். அவர் வெளியூர் சென்றிருப்பதால் அவருடைய வீட்டில் சோதனை நடத்தப்படவில்லை. சென்னைக்கு வந்த உடன் அவரிடம் முறையான விசாரணை நடத்தப்படும்.

இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்.