அரக்கோணம் அருகே இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது


அரக்கோணம் அருகே இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது
x
தினத்தந்தி 1 Oct 2018 12:17 PM IST (Updated: 1 Oct 2018 12:17 PM IST)
t-max-icont-min-icon

அரக்கோணம் அருகே இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை: 

அரக்கோணம் பகுதியில் ஐஎன்எஸ் ராஜாளி கடற்படை விமான பயிற்சி தளம் உள்ளது. இன்று காலை சேத்தக் ரக ஹெலிகாப்டரில் விமானி பயிற்சிக்காக கிளம்பினார். பயிற்சியை முடித்து தரையிறக்க முற்பட்டபோது, திடீரென ஹெலிகாப்டர் பழுதாகி விழுந்து நொறுங்கியது.

இருப்பினும் ஹெலிகாப்டரில் பயணித்த விமானி உள்ளிட்டோர் அதிருஷ்டவசமாக தப்பினர். தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஹெலிகாப்டர் பழுதடைந்ததாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
1 More update

Next Story