எய்ம்ஸ் மருத்துவமனை தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்திக்க உள்ளேன்- எடப்பாடி பழனிசாமி


எய்ம்ஸ் மருத்துவமனை தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்திக்க உள்ளேன்- எடப்பாடி பழனிசாமி
x
தினத்தந்தி 4 Oct 2018 7:52 AM GMT (Updated: 4 Oct 2018 7:52 AM GMT)

எய்ம்ஸ் மருத்துவமனை தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்திக்க உள்ளேன் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறி உள்ளார்.

மதுரை

மதுரையில் அதிமுக நிர்வாகிகளுடன் திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் குறித்து முதலமைச்சர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தினர்.

பின்னர் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி துணை முதலவர் ஓ. பன்னீர் செல்வம் பேட்டி அளித்தனர

எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-

 மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவது உறுதி. எய்ம்ஸ் மருத்துவமனை தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்திக்க உள்ளேன். பருவமழை முன்னெச்சரிக்கையாக 3 முறை அதிகாரிகளை அழைத்து ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. ஆர்.கே.நகர் போன்ற நிலை திருப்பரங்குன்றத்தில் நடக்காது. 

தேர்தல் வரும்போதுதான் கூட்டணி பற்றி முடிவெடுக்க முடியும்.. ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம்; கருத்து தெரிவிக்கலாம்.இவ்வாறு அவர் கூறினார்.

Next Story