பழனிசாமி, பன்னீர்செல்வத்துடன் இணைவது தற்கொலைக்கு சமம் டிடிவி தினகரன் சொல்கிறார்


பழனிசாமி, பன்னீர்செல்வத்துடன் இணைவது தற்கொலைக்கு சமம் டிடிவி தினகரன் சொல்கிறார்
x
தினத்தந்தி 5 Oct 2018 7:22 AM GMT (Updated: 5 Oct 2018 7:22 AM GMT)

எடப்பாடி பழனிசாமி - பன்னீர்செல்வத்துடன் இணைவது தற்கொலைக்கு சமம் என டிடிவி தினகரன் சொல்கிறார்.


சென்னை

அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கு முதலமைச்சர் ஆக வேண்டும் என்பது தான் ஒரே குறிக்கோள்.திகார் சிறையில் இருந்து விடுதலையான என்னை ஓபிஎஸ், 2017 ஜூலை மாதம் சந்தித்தார்!  2017 ஜூலை 12ல் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் வேண்டுகோளின்படி, அவரை சந்தித்தேன் .எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்தது தவறு என சந்திப்பின்போது ஓபிஎஸ் கூறினார். முதல்வர் பழனிசாமியை  பதவியில் இருந்து இறக்க தயாராக இருப்பதாக கூறினார். எங்கள் சந்திப்பில் சில ரகசியங்கள் இருப்பதால், அதனை ஓபிஎஸ் மறுக்க மாட்டார்.

கடந்த வாரம் கூட பன்னீர் செல்வம் என்னை சந்திக்க முயற்சி செயததாக கூறபட்டது.  ஓபிஎஸ் என்னை சந்திக்க நேரம் கேட்ட தகவலை  வெளியிட்டதில் எந்த அரசியல் நோக்கமும் இல்லை.  ஓ.பன்னீர்செல்வம் எங்கள் சிலீப்பர் செல் இல்லை . எங்கள் குடும்பம் வேண்டாம் என கூறிக்கொண்டே  என்னை சந்திக்க ஓபிஎஸ் முயற்சித்தார். கடந்த செப்டம்பர் இறுதி வாரத்தில் தன்னை சந்திக்க துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் நேரம் கேட்டார். பழனிசாமி. பன்னீர்செல்வத்துடன் இணைவது தற்கொலைக்கு சமம்.
 
அமமுகவை அதிமுகவுடன் இணைக்க தூதுவிட்டேன் என அமைச்சர் தங்கமணி கூறியதற்கு அவரிடம் ஆதாரம் இருந்தால் அதனை முதலில் வெளியிடட்டும் . திசை திருப்பவே ஆதாரங்கள் இருப்பதாக அமைச்சர் தங்கமணி கூறி உள்ளார்.

முதலமைச்சரை மாற்ற வேண்டும் என்ற கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை.குறுக்கு வழியில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை மத்திய அரசே தமிழக அரசை தாங்கிப் பிடித்து வருகிறது  இவ்வாறு அவர் கூறினார்.

Next Story