டெல்லியில் அதிமுக எம்.பி-க்களுடன், முதல்-அமைச்சர் பழனிசாமி ஆலோசனை


டெல்லியில் அதிமுக எம்.பி-க்களுடன், முதல்-அமைச்சர் பழனிசாமி ஆலோசனை
x
தினத்தந்தி 7 Oct 2018 3:55 PM GMT (Updated: 7 Oct 2018 4:09 PM GMT)

டெல்லியில் உள்ள தமிழக அரசு இல்லத்தில் அதிமுக எம்.பி-க்களுடன், முதல்-அமைச்சர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.

சென்னை,

பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க அனுமதி கேட்டு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த மாதம் (செப்டம்பர்) 30-ந் தேதி பிரதமர் அலுவலகத்தில் கடிதம் அளிக்கப்பட்டது. இந்த நிலையில், நாளை 8-ந் தேதி பிரதமரை சந்திக்க அனுமதி வழங்கப்பட்டிருப்பதாக தெரிகிறது.  பிரதமர் மோடியை நாளை (8-ம் தேதி) சந்திப்பதற்காக முதல்-அமைச்சர் பழனிசாமி இன்று மாலை டெல்லி புறப்பட்டு சென்றார். அமைச்சர் ஜெயக்குமாரும் உடன் சென்றார். 

இந்தநிலையில், பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க சென்ற முதல்-அமைச்சர் பழனிசாமி டெல்லி சென்றடைந்தார். டெல்லியில் உள்ள தமிழக அரசு இல்லத்தில் இன்று இரவு தங்குகிறார்.

முன்னதாக தமிழக அரசு இல்லத்தில் அதிமுக எம்.பி-க்களுடன், பழனிசாமி ஆலோசனை நடத்தினார். நாளை நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அதிமுக அலுவலகத்திற்கு சென்று எம்.பிக்களை சந்திப்பதாக முதல்-அமைச்சர் தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

டெல்லியில் சாகேத் பகுதியில் கட்டப்பட்டு வரும் அதிமுக அலுவலகத்தையும் முதல்-அமைச்சர் பழனிசாமி பார்வையிடுகிறார்.

Next Story