நக்கீரன் கோபாலை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டதால் சாலையில் அமர்ந்து வைகோ தர்ணா போராட்டம்


நக்கீரன் கோபாலை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டதால் சாலையில் அமர்ந்து வைகோ தர்ணா போராட்டம்
x
தினத்தந்தி 9 Oct 2018 6:11 AM GMT (Updated: 9 Oct 2018 6:11 AM GMT)

நக்கீரன் கோபாலை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டதால் சாலையில் அமர்ந்து வைகோ தர்ணா போராட்டம் நடத்தினார்.

சென்னை,

நக்கீரன் இதழின் ஆசிரியர் கோபால் சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னையில் இருந்து புனே செல்லவிருந்த நக்கீரன் கோபாலை காவல்துறையினர் கைது செய்தனர். ஆளுநர் பணியில் தலையிட்டதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் நக்கீரன் கோபால் கைது செய்யபட்டார்.சென்னை ஜாம்பஜார் காவல் நிலையத்தில் நக்கீரன் கோபால் மீது சட்டப்பிரிவு 124 -ன் கீழ் வழக்குப் பதிவு  செய்யபட்டு உள்ளது. குடியரசுத் தலைவர் அல்லது ஆளுநரின் பணியை செய்ய விடாமல் உள்நோக்குடன் செயல்படுதல் பிரிவில் வழக்கு  பதிவு செய்யப்பட்டு உள்ளது. 

சென்னை சிந்தாதிரிபேட்டை காவல் நிலையத்தில் நக்கீரன் கோபாலை சந்திக்க வந்த வைகோவிற்கு அனுமதி மறுக்கபட்டது. 
நக்கீரன் கோபாலை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டதால் சாலையில் அமர்ந்து வைகோ தர்ணா போராட்டம் நடத்தினார். வைகோ கூறியதாவது;- 

நக்கீரன் கோபால்  மீது தேச துரோக வழக்கு பதியப்பட்டு இருக்கிறது.நக்கீரன் கோபாலை கைது செய்தது பத்திரிகையாளர்களை மிரட்டும் செயல் .ஒரு வழக்கறிஞராக நக்கீரன் கோபாலை சந்திக்க வந்துள்ளேன்

சட்டவிதிகளின்படி வழக்கறிஞர் என்ற முறையில் நக்கீரன் கோபாலை சந்திக்க வந்துள்ளேன். நக்கீரன் கோபாலை சந்திக்க போலீசார் அனுமதி தரவில்லையெனில் அவமதிப்பு வழக்கு தொடுப்பேன். என கூறினார்.


Next Story