மாநில செய்திகள்

மு.க.ஸ்டாலின், வைகோவுடன் நக்கீரன் கோபால் சந்திப்பு தனக்காக குரல் கொடுத்ததற்காக நன்றி தெரிவித்தார் + "||" + with MK Stalin, Vaiko Nakheeran Gopal Meet

மு.க.ஸ்டாலின், வைகோவுடன் நக்கீரன் கோபால் சந்திப்பு தனக்காக குரல் கொடுத்ததற்காக நன்றி தெரிவித்தார்

மு.க.ஸ்டாலின், வைகோவுடன் நக்கீரன் கோபால் சந்திப்பு
தனக்காக குரல் கொடுத்ததற்காக நன்றி தெரிவித்தார்
தனக்காக குரல் கொடுத்ததற்காக மு.க.ஸ்டாலின், வைகோ ஆகியோரை நேரில் சந்தித்து நக்கீரன் கோபால் நன்றி தெரிவித்தார்.
சென்னை,

கவர்னருக்கு எதிராக அவதூறு செய்தி வெளியிட்டதாக கூறி, நேற்று முன்தினம் நக்கீரன் ஆசிரியர் கோபால் திடீரென்று கைது செய்யப்பட்டார். இதற்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள், பத்திரிகையாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். அவரை சிறைக்கு அனுப்ப வழக்கில் எந்த முகாந்திரமும் இல்லை என்று கூறி, நக்கீரன் கோபாலை கோர்ட்டு விடுவித்தது.

மு.க.ஸ்டாலின்- வைகோவுடன் சந்திப்பு

தனக்காக போராடியவர்களுக்கு நக்கீரன் கோபால் நன்றி தெரிவித்து வருகிறார். அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை அவர் சந்தித்து நன்றி தெரிவித்துக்கொண்டார். தனக்கு ஆதரவாக சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்திய வைகோவை, நக்கீரன் கோபால் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்.

பின்னர் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நிருபர்களிடம் கூறியதாவது:-

கருப்பு கொடி

நக்கீரன் கோபால் ஜெயிலுக்கெல்லாம் பயப்பட மாட்டார் என்று நான் கூறினேன். உயிருக்கு துணிந்து அவர் காடுகளுக்கெல்லாம் போய் வந்தவர். 2 வருடம் நான் ஜெயிலில் இருந்தது போல அவர் பொடாவில் இருந்தார். எனவே இதுபற்றி அவர் கவலைப்பட மாட்டார். ஆனால் இன்றைக்கு நக்கீரன் கோபாலுக்கு வந்தது நாளை மற்ற பத்திரிகைகளுக்கு, தொலைக்காட்சிகளுக்கு வரலாம். தமிழக அரசியலுக்கு வரலாம்.

நீதிபதி கோபிநாத் 124-க்கு முகாந்திரம் இல்லை என்று சொன்னது ராஜ்பவன் கன்னத்தில் விழுந்த அறை என்று சொன்னேன். ஆட்சியை கலைப்பதற்கு கூட அறிக்கை அனுப்பிய கவர்னர்கள் உண்டு. ஆனால் இந்த பதவியை தவறாக பயன்படுத்தி ஒரு போட்டி அரசாங்கத்தை நடத்திக் கொண்டு மந்திரிகளையும், எம்.பி.க்களையும் உள்ளே விடாமல் அலுவலர்களை மட்டும் விட்டு நிர்வாகத்தை பற்றி கவர்னர் விசாரணை செய்கிறார். அதற்கு தான் தி.மு.க. எல்லா இடங்களிலும் கருப்பு கொடி காட்டியது.

கவர்னர் பதவி

கவர்னர் பதவி ஒழிக்கப்பட வேண்டும் என்பது அண்ணாவின் கோரிக்கை. எங்கள் கோரிக்கை. இந்த கவர்னர் வந்ததில் இருந்து மத்திய அரசின் ஏஜெண்டாக இருக்கிறார். இங்குள்ள அரசாங்கத்துக்கு முதுகெலும்பும் கிடையாது. சுயமரியாதையும் கிடையாது.

இந்த நாட்டில் நீதியை காப்பாற்றும் நீதிபதிகளும் இருக்கிறார்கள் என்பதை நீதிபதி கோபிநாத் நிரூபித்து இருக்கிறார். நக்கீரன் கோபாலை நெருங்கி மூக்கறுபட்ட நிலையில் இனிமேல் இதுபோன்ற சட்ட விரோதமான செயல்களில் தமிழக போலீசை ஈடுபடுத்தக் கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.


தொடர்புடைய செய்திகள்

1. டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையை அமைச்சர் எடுக்கவில்லை : மு.க.ஸ்டாலின் பேட்டி
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்த சிறுவன் ரிஷ்வான் இல்லத்துக்குச் சென்று துக்கம் விசாரித்து, நிவாரண உதவிகளை வழங்கினார்.
2. ‘லஞ்ச ஒழிப்பு துறை மேல்முறையீடு செய்யும் என்று நான் சொல்லவில்லை’ மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு பொன்னையன் மறுப்பு
சென்னை ஐகோர்ட்டு ஆணை குறித்து லஞ்ச ஒழிப்பு துறை மேல்முறையீடு செய்யும் என நான் சொல்லவில்லை என்று மு.க.ஸ்டாலின் புகாருக்கு பொன்னையன் மறுப்பு தெரிவித்துள்ளார்.
3. ஐஏஎஸ் அகாடமி நிறுவனர் சங்கர் மறைவு கிராமப்புற ஏழை, எளிய மாணவர்களுக்கு பேரிழப்பு - மு.க.ஸ்டாலின்
ஐஏஎஸ் அகாடமி நிறுவனர் சங்கர் மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
4. மக்களுக்கு எதிரான திட்டங்களை கருத்து கேட்காமல் செயல்படுத்த நினைப்பதா? மு.க.ஸ்டாலின் கண்டனம்
மக்களுக்கு எதிரான திட்டங்களை கருத்து கேட்காமல் செயல்படுத்த நினைப்பதா? என்று அ.தி.மு.க. அரசுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
5. ‘மு.க.ஸ்டாலின் எப்போது முதல்-அமைச்சர் ஆவார் என்று மக்கள் கனவு காண்கிறார்கள்’ முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி பேட்டி
அ.தி.மு.க. அரசுக்கு எதிராக வீடு, வீடாக துண்டுபிரசுரம்: மு.க.ஸ்டாலின் எப்போது முதல்-அமைச்சராக வருவார் என்று மக்கள் கனவு காண்கிறார்கள் என்று முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி கூறினார்.