நக்கீரன் ஊழியர்கள் முன்ஜாமீன் கேட்டு மனு ஐகோர்ட்டில் இன்று விசாரணை


நக்கீரன் ஊழியர்கள் முன்ஜாமீன் கேட்டு மனு ஐகோர்ட்டில் இன்று விசாரணை
x
தினத்தந்தி 11 Oct 2018 8:52 PM GMT (Updated: 11 Oct 2018 8:52 PM GMT)

நக்கீரன் ஊழியர்கள் முன்ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனு மீது ஐகோர்ட்டில் இன்று விசாரணை நடக்கிறது.

சென்னை,

மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக பேராசிரியர் நிர்மலாதேவியை, போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து நக்கீரன் பத்திரிகை செய்தி வெளியிட்டது. அதில், தமிழக கவர்னர் குறித்தும் சில தகவல்களை வெளியிட்டது.

இதுகுறித்து கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், கவர்னரை பணி செய்யவிடாமல் தடுத்தார் என்று நக்கீரன் கோபாலை போலீசார் கைது செய்தனர். ஆனால், இவர் மீது குற்றச்சாட்டுக்கு போதுமான ஆதாரம் இல்லை என்று கூறி அவரை மாஜிஸ்திரேட்டு கோபிநாத் விடுவித்து உத்தரவிட்டார். இந்தநிலையில், நக்கீரன் பத்திரிகை செய்தி ஆசிரியர் பிரகாஷ் உள்பட 35 ஊழியர்கள் தங்களுக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு இன்று (வெள்ளிக்கிழமை) நீதிபதி எம்.தண்டபாணி முன்பு விசாரணைக்கு வர உள்ளது.

Next Story