கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் முடிவை வெளியிட தடை ஐகோர்ட்டு உத்தரவு


கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் முடிவை வெளியிட தடை ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 11 Oct 2018 9:45 PM GMT (Updated: 11 Oct 2018 9:45 PM GMT)

கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் முடிவுகளை வெளியிட இடைக்கால தடை விதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

வேலூர், திருவண்ணாமலை பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் முடிவுகளை வெளியிட இடைக்கால தடை விதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

காஞ்சீபுரம், திருவள்ளூர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களின் தேர்தலில் அதிக அளவில் முறைகேடு நடந்துள்ளது என்று கூறி பலர், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

அதேபோல, விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி சர்க்கரை ஆலையின் கூட்டுறவு சங்கத் தேர்தலில் அதிக அளவிலேயே முறைகேடு நடந்து இருப்பதாக கூறி இந்த தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று சிலர் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

வேலூர், திருவண்ணாமலை பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களின் தேர்தல், சத்தியமங்கலம், கோபிச்செட்டிப்பாளையம் கூட்டுறவு சங்கங்களில் தேர்தல், குடவாசல் விவசாய கூட்டுறவு சங்கத் தேர்தல் உள்ளிட்ட கூட்டுறவு சங்கங்களின் தேர்தலில் ஏராளமான முறைகேடு நடந்துள்ளது என்றும், தங்களது வேட்புமனுவை பெறாமல், ஆளும் கட்சியினருக்கு ஆதரவாக தேர்தல் அறிவிப்பை வெளியிட உள்ளதாகவும் கூறி ஐகோர்ட்டில் பலர் வழக்கு தொடர்ந்தனர். அவர்கள் இந்த தேர்தலை ரத்து செய்யவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்த வழக்குகள் அனைத்தையும் நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் விசாரித்தார். பின்னர், இன்று (வெள்ளிக்கிழமை) இந்த கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் முடிவுகளை அறிவிப்பதற்கு இடைக்கால தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

Next Story