மக்கள் நீதி மய்யம் காங்கிரசுடன் கூட்டணி அமைக்கும் ‘தந்தி’ டி.வி.க்கு கமல்ஹாசன் பேட்டி


மக்கள் நீதி மய்யம் காங்கிரசுடன் கூட்டணி அமைக்கும் ‘தந்தி’ டி.வி.க்கு கமல்ஹாசன் பேட்டி
x
தினத்தந்தி 12 Oct 2018 11:15 PM GMT (Updated: 12 Oct 2018 10:29 PM GMT)

தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி உடைய வாய்ப்பு இருப்பதாகவும், காங்கிரசுடன் மக்கள் நீதி மய்யம் கூட்டணி அமைப்பதை மறுப்பதற்கில்லை என்றும் கமல்ஹாசன் கூறினார்.

சென்னை, 

‘தந்தி’ டி.வி.யின் சிறப்பு கேள்விக்கென்ன பதில்? நிகழ்ச்சி சேலத்தில் நடைபெற்றது. தொலைக்காட்சி வரலாற்றில் முதல் முறையாக மக்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்த கேள்வி-பதில் நிகழ்ச்சியில் ‘தந்தி’ டிவியின் தலைமை செய்தி ஆசிரியர் ரங்கராஜ் பாண்டே எழுப்பிய கேள்விகளுக்கு மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் பதில் அளித்தார்.

கமல்ஹாசன் அளித்த பதில்களில் முக்கியமானவை வருமாறு:-

தி.மு.க.வுடன் மக்கள் நீதி மய்யம் கூட்டணி அமைக்காது. காங்கிரசுடன் கூட்டணி அமைப்பதை மறுப்பதற்கில்லை. தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி உடையக்கூடிய வாய்ப்பு உண்டு. அந்த கூட்டணி உடையும். நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடும்.

அ.தி.மு.க. மற்றும் தி.மு.க.வை தமிழக அரசியலில் இருந்து அகற்ற மக்கள் நீதி மய்யம் பாடுபடும். அ.தி.மு.க.வையும், தி.மு.க. வையும் மக்கள் நீதி மய்யம் சரிசமமாகத்தான் அணுகுகிறது.

சபரிமலையில் பெண்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவதன் மூலம், அங்கு செல்லும் அய்யப்ப பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

கல்லூரிகளில் அரசியல் பேசுவது குற்றமல்ல. மாணவர்களுக்கு அரசியல் விழிப்புணர்வு இருக்கிறது. அனைத்துக் கட்சிகளும் கல்லூரிகளில் அரசியல் பேசினாலும் தவறில்லை.

கல்லூரிகளுக்கு தமிழக அரசு ரகசிய சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. அதில் நடிகர்களை உள்ளே அனுப்பாதீர்கள் என்று கூறி உள்ளது. அரசியல் பேச அனுமதிக்காதீர்கள் என்று அரசாணை அனுப்பிவிட்டு, மறுநாள் முதல்-அமைச்சர் ஒரு கல்லூரியில் அரசியல் பேசுகிறார்.

இதுபோன்று கமல்ஹாசன் அளித்த பதில்கள் அடங்கிய சிறப்பு கேள்விக்கென்ன பதில்? நிகழ்ச்சியை ‘தந்தி’ தொலைக்காட்சியில் இன்று (சனிக்கிழமை) இரவு 9.30 மணிக்கு காணலாம்.

Next Story