மாநில செய்திகள்

வி.ஜி.சந்தோசம் எழுதிய புத்தக வெளியீட்டு விழாடாக்டர் ராமதாஸ் வெளியிட, இரா.கண்ணன் ஆதித்தன் பெற்றுக் கொண்டார் + "||" + VG santhosam Book launch ceremony

வி.ஜி.சந்தோசம் எழுதிய புத்தக வெளியீட்டு விழாடாக்டர் ராமதாஸ் வெளியிட, இரா.கண்ணன் ஆதித்தன் பெற்றுக் கொண்டார்

வி.ஜி.சந்தோசம் எழுதிய புத்தக வெளியீட்டு விழாடாக்டர் ராமதாஸ் வெளியிட, இரா.கண்ணன் ஆதித்தன் பெற்றுக் கொண்டார்
வி.ஜி.சந்தோசம் எழுதிய ‘விவசாயம்’ என்ற புத்தகத்தை டாக்டர் ராமதாஸ் வெளியிட, இரா. கண்ணன் ஆதித்தன் பெற்றுக் கொண்டார்.
சென்னை,

வி.ஜி.பி. குழும தலைவர் அதிபர் வி.ஜி.சந்தோசம் எழுதிய ‘விவசாயம்’ என்ற பெயரில் புத்தகத்தை எழுதி உள்ளார். வி.ஜி.பி. உலகத் தமிழ் சங்கம் மற்றும் கைத்தடி பதிப்பகம் இணைந்து நடத்திய இந்த புத்தக வெளியீட்டு விழா சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர். ஜானகி கல்லூரியில் நேற்று மாலை நடைபெற்றது. விழாவுக்கு டாக்டர் எம்.ஜி.ஆர். கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் வேந்தர் ஏ.சி.சண்முகம் தலைமை தாங்கினார்.

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் புத்தகத்தின் முதல் பிரதியை வெளியிட, ‘மாலை முரசு’ பத்திரிகையின் நிர்வாக இயக்குனர் இரா.கண்ணன் ஆதித்தன் பெற்றுக் கொண்டார். தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் குமரி அனந்தன், துணை தலைவர் எச்.வசந்தகுமார், தமிழ் வளர்ச்சித்துறை இயக்குனர் கோ.விஜயராகவன், டாக்டர் எம்.ஜி.ஆர். ஜானகி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தாளாளர் லதா ராஜேந்திரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். கைத்தடி பதிப்பகத்தின் நிறுவனர் மு.ஞா.செ.இன்பா புத்தகம் குறித்து திறனாய்வு உரையாற்றினார்.

ஏற்புரை வழங்கினார்

வி.ஜி.பி. குழுமத் தலைவர் வி.ஜி.சந்தோசம் ஏற்புரை வழங்கினார். விழாவில் முன்னதாக வி.ஜி.பி. குழும நிர்வாக இயக்குனர் வி.ஜி.பி.ரவிதாஸ் வரவேற்புரையாற்றினார். முடிவில், வி.ஜி.பி. குழும இயக்குனர் வி.ஜி.பி. ராஜாதாஸ் நன்றியுரை வழங்கினார். விழா நிகழ்ச்சிகளை டாக்டர் எம்.ஜி.ஆர். ஜானகி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் டீன் அபிதா சபாபதி தொகுத்து வழங்கினார்.

விழாவில் பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, துணை பொதுச்செயலாளர் ஏ.கே.மூர்த்தி, ம.தி.மு.க. துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யா உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.