மாநில செய்திகள்

சின்மயி பாலியல் புகார்: வைரமுத்து மீது ஏன் நடவடிக்கை எடுக்க தயங்குகிறார்கள் திலகவதி கேள்வி + "||" + Chinmayi Sexual Complaint:  They are reluctant to take action against Vairamuthu thilagavathi question

சின்மயி பாலியல் புகார்: வைரமுத்து மீது ஏன் நடவடிக்கை எடுக்க தயங்குகிறார்கள் திலகவதி கேள்வி

சின்மயி பாலியல் புகார்: வைரமுத்து மீது ஏன் நடவடிக்கை எடுக்க தயங்குகிறார்கள் திலகவதி கேள்வி
பணத்துக்காக பாடல் எழுதுபவர் தானே? வைரமுத்து, என சின்மயி பாலியல் புகார் குறித்து திலகவதி கூறி உள்ளார்.
சென்னை

கவிஞர் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்த சின்மயிக்கு ஆதரவாக பலரும் கருத்து வெளியிட்டு இருந்தனர். நடிகர்கள் பிரகாஷ்ராஜ், சித்தார்த், நடிகை ஸ்ரீரெட்டி உள்ளிட்ட திரையுலகினரும் ஆதரவு தெரிவித்திருந்தனர். இது சமூக வலைதளங்களில் கடுமையான விவாத பொருளாக உருவெடுத்தது.

இந்த நிலையில் என் மீது வழக்கு போடலாம், சந்திக்க காத்திருக்கிறேன். நான் நல்லவனா, கெட்டவனா? என்பதை நீதிமன்றம் சொல்லட்டும்”, என்று பாடகி சின்மயி புகாருக்கு கவிஞர் வைரமுத்து பதில் அளித்துள்ளார்.

இது குறித்து முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி திலகவதி அளித்த பேட்டியில் கூறி இருப்பதாவது:-

‘மீ டூ’ இயக்கம் என்பது வரவேற்கத்தக்க ஒன்று. பெண்கள் மீதான செக்ஸ் ரீதியான துன்புறுத்தல் என்பது பிறப்பில் இருந்து இறப்பு வரை தொடர்கிறது. வெளிச்சத்துக்கு வரவேண்டிய வி‌ஷயம் இது.

அப்போதுதான் சட்ட ரீதியிலான நடவடிக்கையோ நீதியோ கிடைக்கும். பிரபலங்கள் மட்டுமல்லாது பிரபலங்கள் அல்லாதவர்களும் பாதிக்கப்பட்டு இருந்தால் வெளியில் வந்து சொல்ல வேண்டும்.

வைரமுத்து மீது ஏன் நடவடிக்கை எடுக்க தயங்குகிறார்கள் என்று தெரியவில்லை. அவர் ஏதாவது கட்சியில் அடிப்படை உறுப்பினராக இருக்கிறாரா? ஏதேனும் பொறுப்பில் இருக்கிறாரா? இல்லையே. பணத்துக்காக பாடல் எழுதுபவர் தானே? பிறகு ஏன் அவரை விசாரிக்கக் கூடாது?

வைரமுத்து தன் மீது வைக்கப்பட்ட குற்றசாட்டுகளுக்கு காலம் தான் பதில் சொல்லும் என்கிறார். காலமா சின்மயிக்கு பாலியல் துன்புறுத்தல் தந்தது? இப்படி ஒரு பதிலை சொல்லிவிட்டு ஒதுங்கலாமா? சம்பந்தப்பட்டவர்கள் தானே பதில் சொல்லவேண்டும்?

வைரமுத்து ஒரு பெரிய மனிதர் என்று சொல்லிக்கொள்கிறார். அதை நாங்கள் தான் சொல்லவேண்டும். பிரபலமானவர்கள் எல்லாம் பெரிய மனிதர்கள் கிடையாது. அழகாக பேசினாலே அதற்கு மயங்கக் கூடியவர்கள் தமிழர்கள். அதுபோன்ற போக்கு தான் இது.

சின்மயி வி‌ஷயத்தில் அரசியல் இருப்பதாக எனக்கு தோன்றவில்லை. சின்மயி ஏன் காவல்துறைக்கு செல்ல தாமதிக்கிறார் என்றும் தெரியவில்லை. சின்மயி வி‌ஷயத்தில் யாராவது ஒரு நீதிபதி தானே முன்வந்து கையில் எடுத்து விசாரிக்க வேண்டும்.

இது இன்னும் வழக்காக மாறாமல் இருப்பது எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. சின்மயி தாமதமாக புகார் சொல்வதை குறை சொல்ல முடியாது. சம்பவம் நடந்தபோது அவருக்கு 17, 18 வயது தான். அந்த சூழலில் அவர் குழப்ப நிலைக்கு தான் சென்றிருப்பார். இப்போது அவருக்கு வயது காரணமாக பக்குவம் வந்திருக்கலாம்.

இன்று பெண்கள் துணிச்சலாக பல வி‌ஷயங்களில் சாதித்து வருகிறார்கள். ஆனால் பழமைவாதத்தை கையில் பிடித்துள்ளார்கள். பழமையை சில வி‌ஷயங்களில் தான் கடைபிடிக்க வேண்டும். பெண்ணுக்கு தீங்கு நடக்கும்போது அவள் அதை சத்தமாக வெளியில் கொண்டுவரவேண்டும்.

இதில் வெட்கப்பட வேண்டியவர் அந்த குற்றத்தை செய்தவர்தானே தவிர பாதிக்கப்படும் பெண்கள் அல்ல என்பது புரிய வேண்டும். சமூக வலைதளங்களில் இதை பகிர்வதால் நிச்சயம் தீர்வு கிடைக்கும் என்று நம்புகிறேன்.

அரசாங்கமும் இதற்கு இன்னும் உதவ வேண்டும். குடும்ப கட்டுப்பாடு, மழை நீர் சேகரிப்பு போன்று இந்த பிரச்சனையிலும் பிரசார இயக்கங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

ஜெயலலிதா இருந்தபோது இதுபோன்ற புகார்களை எடுத்து சென்று இருந்தால் உடனடியாக நடவடிக்கை எடுத்து இருப்பார்.

இவ்வாறு திலகவதி கூறி உள்ளார்.