மாநில செய்திகள்

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அனுமதிக்க மாட்டோம் என அறிவிக்க வேண்டும் : டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல் + "||" + The Hydro Carbon project will not be allowed to announce: Dr. Ramadoss assertion

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அனுமதிக்க மாட்டோம் என அறிவிக்க வேண்டும் : டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அனுமதிக்க மாட்டோம் என அறிவிக்க வேண்டும் : டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
காவிரி பாசன மாவட்டங்களை பாதுகாக்க அக்கறை இருந்தால் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அனுமதிக்க மாட்டோம் என தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை,

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நாகை மாவட்டம் கொள்ளிடத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு எதிரான விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்ட பா.ம.க.வினர் 24 பேரை காவல்துறை கைது செய்துள்ளது. அவர்கள் மீது சட்டவிரோதமாக கூடியதாக பொய்யான வழக்கும் பதிவு செய்யப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது. இது சட்டவிரோத செயல் மட்டுமின்றி, உரிமைக்குரலை அப்பட்டமாக ஒடுக்கும் முயற்சியும் ஆகும்.

தமிழகத்தின் நெற்களஞ்சியமாக திகழும் காவிரி பாசன மாவட்டங்களை பாதுகாக்க வேண்டியது அங்கு வாழும் ஒவ்வொருவரின் கடமை ஆகும். அதைத் தான் கடலூர் மற்றும் நாகை மாவட்டங்களைச் சேர்ந்த பா.ம.க.வினரும், பசுமைத்தாயகம் அமைப்பினரும் செய்தார்கள். அவர்களின் பணி பாராட்டப்பட வேண்டியதாகும்.

ஆனால், மத்திய அரசுக்கு கங்காணியாகவும், ஹைட்ரோ கார்பன் திட்டங்களை செயல்படுத்த உரிமம் பெற்றுள்ள வேதாந்தா போன்ற நிறுவனங்களின் கூலிப்படையாகவும் செயல்பட்டு வரும் அ.தி.மு.க. அரசு, இயற்கை வளங்களை பாதுகாக்கும் நோக்கத்துடன் விழிப்புணர்வு பிரசாரம் செய்தவர்களை கைது செய்து கொடுமைப்படுத்தி இருக்கிறது. காவிரி பாசன மாவட்டங்களைச் சேர்ந்த மக்களுக்கு இதைவிட மிகமோசமான நம்பிக்கைத் துரோகத்தை எவராலும் இழைக்க முடியாது.

“தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ளாத எந்தத் திட்டத்தையும் தமிழக அரசு அனுமதிக்காது” என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் தொடர்ந்து கூறிவருகின்றனர். ஆனால், மறுபுறத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக போராடும் மக்கள் மீது அடக்குமுறையை கட்டவிழ்த்து விடுகின்றனர். அவர்களின் இரட்டை வேடம் வெகுவிரைவில் மக்களிடம் அம்பலமாகிவிடும்.

காவிரி பாசன மாவட்டங்களை பாதுகாக்க வேண்டும் என்பதில் ஆட்சியாளர்களுக்கு அக்கறை இருந்தால் ஹைட்ரோ கார்பன் திட்டங்களை தமிழக அரசு அனுமதிக்காது என்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட வேண்டும். பா.ம.க.வினர் மீதான வழக்குகளை அரசு திரும்பப்பெற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. தமிழக உரிமைகளை மீட்டெடுக்க 10 கோரிக்கைகளை முதல்வர், துணை முதல்வரிடம் அளித்துள்ளோம்.- டாக்டர் ராமதாஸ்
தமிழக உரிமைகளை மீட்டெடுக்க 10 கோரிக்கைகளை முதல்வர், துணை முதல்வரிடம் அளித்துள்ளோம் என பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.
2. பா.ம.க.வின் 17-வது நிழல் பட்ஜெட் : டாக்டர் ராமதாஸ் வெளியிட்டார்
பா.ம.க.வின் 17-வது நிழல் பட்ஜெட்டை டாக்டர் ராமதாஸ் சென்னையில் நேற்று வெளியிட்டார்.
3. தேர்தல் கூட்டணி, பொதுக்குழு கூட்டத்தில் விவாதித்து முடிவு எடுக்கப்படும் - டாக்டர் ராமதாஸ் பேச்சு
தேர்தல் கூட்டணி குறித்து பொதுக்குழு கூட்டத்தில் விவாதித்து முடிவு எடுக்கப்படும் என்று டாக்டர் ராமதாஸ் கூறினார்.
4. ஊர் பெயர்கள் தமிழில் மாற்றம்: அமைச்சர் பாண்டியராஜன் அறிவிப்புக்கு டாக்டர் ராமதாஸ் பாராட்டு
ஊர் பெயர்கள் தமிழ் உச்சரிப்பு போன்றே ஆங்கிலத்தில் மாற்றப்படும் என்று அறிவித்த அமைச்சர் பாண்டியராஜன் நடவடிக்கைக்கு டாக்டர் ராமதாஸ் பாராட்டு தெரிவித்துள்ளார்.
5. தமிழகத்தில் பா.ம.க. ஆட்சி மலர இளைஞர்கள் தீவிர களப்பணியாற்ற வேண்டும் தர்மபுரியில் டாக்டர் ராமதாஸ் பேச்சு
தமிழகத்தில் பா.ம.க. ஆட்சி மலர இளைஞர்கள் தீவிர களப்பணியாற்ற வேண்டும் என்று தர்மபுரியில் நடந்த கூட்டத்தில் டாக்டர் ராமதாஸ் பேசினார்.

ஆசிரியரின் தேர்வுகள்...