தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் வாபஸ்


தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் வாபஸ்
x
தினத்தந்தி 17 Oct 2018 4:13 PM GMT (Updated: 17 Oct 2018 4:13 PM GMT)

பேச்சுவார்த்தையை அடுத்து தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

சென்னை,

சட்டவிரோதமான முறையில் நிலத்தடிநீரை உறிஞ்சுவதை ஐகோர்ட்டு தடை செய்ததை கண்டித்து தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் 3–வது நாளாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். 

அவர்களுக்கு ஆதரவாக குடிநீர் கேன் உற்பத்தியாளர்களில் ஒருபிரிவினரும் நேற்று முதல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஒருசில வணிக வளாகங்களும், ஏராளமான ஓட்டல்களும் தண்ணீர் தட்டுப்பாட்டால் மூடப்பட்டது. தண்ணீர் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் காரணமாக பொதுமக்களும் பாதிக்கப்பட்டனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு தண்ணீர் கிடைக்கும் வகையில் சென்னை குடிநீர் வாரியம் மாற்று ஏற்பாடு செய்தது. 
 
சென்னை தலைமை செயலகத்தில் நடந்த பேச்சுவார்த்தையில் குடிநீர் கேன் உற்பத்தியாளர்கள் சங்கத்தினரும் பங்கேற்றனர். இதில் சுமுக முடிவு ஏற்பட்டதால் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. இதற்கிடையே பொதுப்பணித்துறை செயலாளர் எஸ்.கே.பிரபாகர் தலைமையிலான குழுவினரிடம் தனியார் லாரி உரிமையாளர் சங்கத்தினர் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில் முடிவு ஏற்படவில்லை. ‘‘பேச்சுவார்த்தையில் எங்கள் கோரிக்கைகளை அதிகாரிகள் ஏற்றுக்கொள்ளவில்லை” என்று தண்ணீர் லாரி உரிமையாளர்கள் கூட்டமைப்பு தலைவர் நிஜலிங்கம் கூறினார். 

சென்னையில் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டது.

 இதனையடுத்து  பொதுப்பணித்துறை செயலாளர் எஸ்.கே.பிரபாகர் தலைமையில் இரண்டாவது கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதனையடுத்து அமைச்சர் வேலுமணியை தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் சந்தித்து பேசினார்கள். இதனையடுத்து தண்ணீர் லாரி உரிமையாளர் சங்கத்தினர் வேலைநிறுத்தத்தை வாபஸ் பெற்றனர். இதனையடுத்து அமைச்சர் வேலுமணியின் உறுதியை ஏற்று போராட்டத்தை வாபஸ் பெறுவதாக கூறியுள்ளார் நிஜலிங்கம். பொதுமக்களின் சிரமம் கருதி தாங்களாவே போராட்டத்தை வாபஸ் பெறுகிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story