மாநில செய்திகள்

ரூ. 50 லட்சம் கேட்டு மாணவன் கடத்தல் - ஆட்டோ டிரைவர் கைது + "||" + A student kidnapped by 50 lakh

ரூ. 50 லட்சம் கேட்டு மாணவன் கடத்தல் - ஆட்டோ டிரைவர் கைது

ரூ. 50 லட்சம் கேட்டு மாணவன் கடத்தல் - ஆட்டோ டிரைவர் கைது
தர்மபுரியில் 50 லட்சம் ரூபாய் கேட்டு பள்ளி மாணவன் கடத்தப்பட்ட வழக்கில், ஆட்டோ டிரைவர் வெங்கடேசன் என்பவர் கைது செய்யப்பட்டார்.
சென்னை,

தர்மபுரியில் 50 லட்சம் ரூபாய் கேட்டு பள்ளி மாணவன் கடத்தப்பட்ட வழக்கில், ஆட்டோ டிரைவர் வெங்கடேசன் என்பவர் கைது செய்யப்பட்டார். 
சேலம் - மேச்சேரி இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் பத்ரகாளியம்மன் கோவில் செயல் அலுவலராக பணியாற்றும் ராஜா என்பவரின் 14 வயது மகன் பிரகதீஷ்வரன், 2 நாட்களுக்கு முன், ஆட்டோவில் கடத்தப்பட்டார். 

போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டபோது, வெங்கம்பட்டி என்ற இடத்தில், ஆட்டோவில் இருந்து கீழே குதித்த பிரகதீஷ்வரன், அப்பகுதியில் உள்ள தேவராஜ் என்பவர் வீட்டில் அடைக்கலம் புகுந்தான். பின்னர், போலீசார் உதவியுடன் மீட்கப்பட்ட பிரகதீஷ்வரன், அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டான்.