தடா, பொடா, மிசா வழக்குகளை சந்தித்த எங்களுக்கு அவதூறு வழக்குகளை கண்டு பயமில்லை- மு.க.ஸ்டாலின்


தடா, பொடா, மிசா வழக்குகளை சந்தித்த எங்களுக்கு அவதூறு வழக்குகளை கண்டு பயமில்லை- மு.க.ஸ்டாலின்
x
தினத்தந்தி 24 Oct 2018 5:40 AM GMT (Updated: 24 Oct 2018 5:40 AM GMT)

தடா, பொடா, மிசா வழக்குகளை சந்தித்த எங்களுக்கு அவதூறு வழக்குகளை கண்டு பயமில்லை என அவதூறு வழக்குகள் தொடர்பாக சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரான பின் மு.க.ஸ்டாலின் பேட்டி அளித்தார்.

சென்னை,

மு.க ஸ்டாலின் எம்.பி, எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரானார்.  ஸ்டாலின் மீது ஜெயலலிதா 5 வழக்குகளும், எடப்பாடி ஒரு வழக்கும், அமைச்சர் ஆர்.பி உதயகுமார் சார்பில் ஒரு அவதூறு வழக்கும் தொடரப்பட்டுள்ளது. 

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மீது தமிழக அரசு தொடர்ந்த வழக்கு  அக்டோபர் 31-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. 

அவதூறு வழக்குகள் தொடர்பாக சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரான பின் மு.க.ஸ்டாலின் பேட்டி  அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழக அரசின் அவதூறு வழக்குகளை எந்த சூழ்நிலையிலும் சந்திக்க தயாராக உள்ளோம். அதிமுக ஆட்சிக்காலத்தில் என் மீது 7 அவதூறு வழக்குகள் போடப்பட்டன. தடா, பொடா, மிசா வழக்குகளை சந்தித்த எங்களுக்கு அவதூறு வழக்குகளை கண்டு பயமில்லை என கூறினார்.

Next Story