பெட்ரோல் விலை 21 காசுகள் குறைவு, டீசல் விலை 08 காசு குறைந்தது


பெட்ரோல் விலை 21 காசுகள் குறைவு, டீசல் விலை 08 காசு குறைந்தது
x
தினத்தந்தி 30 Oct 2018 12:54 AM GMT (Updated: 30 Oct 2018 12:54 AM GMT)

வாகன ஓட்டிகளுக்கு சற்று ஆறுதல் அளிக்கும் வகையில், பெட்ரோல் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது.

சென்னை,

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயித்து கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியிருந்தது. இதன்படி, பெட்ரோல், டீசல் விலை கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் தினந்தோறும் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது.

ஆரம்பத்தில் லிட்டருக்கு ஒற்றை இலக்க பைசா கணக்கில் உயர்த்தப்பட்டு வந்தது. அதே நிலையில் சில நேரங்களில் குறைக்கப்பட்டும் வந்தது. ஆனால், கடந்த சில மாதங்களில்   அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி, கச்சா எண்ணைய் விலை உயர்வு உள்ளிட்ட காரணிகளில் பெட்ரோல், டீசல் விலை கடும் உயர்வை சந்தித்தது. நாள்தோறும் விலையில் புதிய உச்சத்தை பெட்ரோல், டீசல் விலை எட்டி வாகன ஓட்டிகளுக்கு கலக்கத்தை அளித்தது. 

இந்நிலையில், கடந்த இருவாரமாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து குறைந்து வருவது வாகன ஓட்டிகளுக்கு சற்று ஆறுதல் அளிக்கும் வகையில் அமைந்துள்ளது. 13 நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து குறைந்துக் கொண்டே வருகிறது. சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 21 காசுகள் குறைக்கப்பட்டு 82 ரூபாய் 65 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. டீசல் விலை லிட்டருக்கு 08 காசுகள் குறைக்கப்பட்டு 78 ரூபாய்க்கு உள்ளது. கடந்த 13 நாட்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் 45 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் 4 காசுகளும் குறைக்கப்பட்டுள்ளன.


Next Story