பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை


பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை
x
தினத்தந்தி 31 Oct 2018 1:09 AM GMT (Updated: 31 Oct 2018 1:09 AM GMT)

சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே விற்பனை செய்யப்படுகின்றது.

சென்னை, 

பெட்ரோல்-டீசல் விலை தினசரி நிர்ணயம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டதில் இருந்து ராக்கெட் வேகத்தில் விலை அதிகரித்தது. ஒரு கட்டத்தில் வரலாறு காணாத விலை உயர்வை பெட்ரோல்-டீசல் விலைகள் சந்தித்தன.

இந்த நிலையில் தொடர் உச்சத்தில் இருந்து வந்த பெட்ரோல்-டீசல் விலை கடந்த 2 வாரங்களாகவே இறங்கு முகத்தில் இருக்கிறது. கடந்த 18-ந் தேதியில் இருந்து பெட்ரோல்-டீசல் விலை குறைந்து கொண்டே வருகிறது.

நேற்று முன்தினம் 82 ரூபாய் 86 காசுக்கு விற்பனையான பெட்ரோல், நேற்று லிட்டருக்கு 21 காசுகள் குறைந்து 82 ரூபாய் 65 காசுக்கு விற்பனை செய்யப்பட்டது. அதேபோல், ஒரு லிட்டர் டீசல் நேற்று முன்தினம் 78 ரூபாய் 08 காசுக்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று 08 காசுகள் குறைந்து, ரூ.78-க்கு விற்பனை ஆனது. கடந்த 2 வாரங்களாகவே பெட்ரோல்-டீசல் விலை தொடர்ந்து இறங்கு முகத்தில் இருந்து வருவதால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இந்த நிலையில், இன்று பெட்ரோல், டீசல் விலை எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே விற்பனை செய்யப்படுகின்றது. கடந்த 13 தினங்களாக  தொடர்ந்து குறைந்து கொண்டே இருந்த பெட்ரோல், டீசல் விலை இன்று குறையாமல் அதே விலையில் விற்பனை செய்யப்படுவதால், வாகன ஓட்டிகள் சற்று ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

Next Story