தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கடைகள் நாளை வழக்கம்போல் செயல்படும்


தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கடைகள் நாளை வழக்கம்போல் செயல்படும்
x
தினத்தந்தி 1 Nov 2018 12:07 AM GMT (Updated: 2018-11-01T05:37:21+05:30)

ரேஷன் கடைகளுக்கு மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை விடுமுறை ஆகும். தற்போது தீபாவளி பண்டிகையொட்டி, அந்த விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழக அரசு இதுதொடர்பாக  நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் அனைத்து ரேஷன் கடைகளும் மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமையான 2-ந்தேதி (நாளை) வழக்கம் போல் செயல்படும். குடும்ப அட்டைதாரர்கள் தங்கள் குடும்ப அட்டைகளுக்குரிய அத்தியாவசியப் பொருட்களை சிரமமின்றி பெற்றுக் கொள்ளும் வகையில் 2-ந்தேதி முதல் 5-ந்தேதி வரை 4 நாட்கள் தொடர்ந்து அனைத்து ரேஷன் கடைகளும் வழக்கம் போல் செயல்பட ஆணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

2-ந்தேதி பணி நாளாக செயல்பட ஆணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதால், 3-வது வெள்ளிக்கிழமை அதாவது வருகிற 16-ந்தேதி தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளுக்கும் விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Next Story