18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் : 18 பேரின் சாபம் தினகரனை சும்மாவிடாது- அமைச்சர் உதயகுமார்


18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் : 18 பேரின் சாபம் தினகரனை  சும்மாவிடாது- அமைச்சர் உதயகுமார்
x
தினத்தந்தி 1 Nov 2018 2:32 PM IST (Updated: 1 Nov 2018 2:32 PM IST)
t-max-icont-min-icon

18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க விவகாரத்தில் 18 பேரின் சாபம் தினகரனை சும்மாவிடாது என அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறினார்.


சென்னை

யாரையாவது பலி கொடுத்தாவது பதவிக்கு வந்துவிடலாம் என தினகரன் நினைக்கிறார்.  தினகரனிடம் எந்த கொள்கையும் கிடையாது, ஆட்சிக்கு வருவது மட்டுமே தினகரனின் லட்சியம்.
தினகரன் வந்து காப்பாற்ற வேண்டிய சூழ்நிலையில் அரசும், அதிமுகவும்  இல்லை

ராமநாதபுரத்தில் தினகரனுக்கு வரவேற்பு இல்லாத ஏக்கதில், அதிமுகவினரின் பேனர்களை தினகரன் கட்சியினர் கிழித்துள்ளனர்  ஜெயலலிதா மற்றும் மக்களால் 18 பேருக்கு கொடுக்கப்பட்ட பதவி தினகரனால் பறிக்கப்பட்டுள்ளது.தகுதிநீக்க விவகாரத்தில் மேல்முறையீடு செய்வோம் என்று கூறிய 2 நாட்களுக்குள் முடிவை மாற்றியதன் காரணம் என்ன? . குழாயடி சண்டையை உருவாக்கி, தான் பதவிக்கு வரவேண்டும் என்று நினைப்பவர் தினகரன். 18 பேரின் சாபம் அவரை சும்மாவிடாது. என கூறினார்.

Next Story