எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். படிப்புகளில் சேர ‘நீட்’ தேர்வுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்
எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். படிப்புகளில் சேர ‘நீட்’ தேர்வுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இதற்கான கடைசி நாள் வருகிற 30-ந் தேதி ஆகும்.
சென்னை,
டெல்லியில் உள்ள எய்ம்ஸ், புதுச்சேரியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவ கல்லூரிகள் நீங்கலாக இந்தியா முழுவதும் உள்ள மருத்துவ கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். படிப்புகளில் சேர ‘நீட்’ என்று அழைக்கப்படும் தேசிய தகுதி நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.
அந்தவகையில் 2019-ம் ஆண்டுக்கான ‘நீட்’ தேர்வை தேசிய தேர்வு முகமை நடத்துகிறது. அதற்கான அறிவிப்பு தேசிய தேர்வு முகமையின்(என்.டி.ஏ.) www.ntaneet.nic.in இணையதளத்தில் வெளியிடப்பட்டு இருக்கிறது. இந்த தேர்வை எழுதுவதற்கு நேற்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
‘நீட்’ தேர்வு அடுத்த ஆண்டு(2019) மே மாதம் 5-ந் தேதி நடக்கிறது. இந்த தேர்வுக்கு ஆன்லைன் மூலமே விண்ணப்பிக்க முடியும். www.ntaneet.nic.in என்ற இணையதளத்துக்கு சென்று விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வருகிற 30-ந் தேதி(இரவு 11.50 மணி) கடைசி நாள் ஆகும்.
இதற்கு விண்ணப்ப கட்டணமாக பொதுப்பிரிவு மற்றும் ஓ.பி.சி. பிரிவு மாணவர்களுக்கு ரூ.1,400-ம், தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மற்றும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு ரூ.750-ம் நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.
விண்ணப்ப கட்டணத்தை செலுத்துவதற்கு டிசம்பர் 1-ந் தேதி(இரவு 11.50 மணி) கடைசி நாள் ஆகும். ஆன்லைன் விண்ணப்பத்தில் ஏதேனும் திருத்தம் இருப்பின் அதை சரிசெய்ய 14.1.2019 முதல் 31.1.2019 வரை ஒதுக்கப்பட்டு இருக்கிறது. தேர்வுக்கான ஹால் டிக்கெட் 15.4.2019 அன்று வெளியிடப்படும்.
தேர்வு 5.5.2019 அன்று பிற்பகல் 2 மணி முதல் 5 மணி வரை(3 மணி நேரம்) நடக்கிறது. தேர்வு மையத்துக்கு தேர்வர்கள் 1.30 மணிக்கு மேல் வந்தால் அனுமதிக்கப்படமாட்டார்கள். தேர்வர்கள் தேர்வு எழுத இருக்கும் நகரம், மையத்தை குறிப்பிடும் போது கவனமாக குறிப்பிட வேண்டும். அதை பின்னர் மாற்ற முடியாது. தேர்வர்கள் தங்களுடைய நகரத்துக்குள் இருக்கும் மையங்கள் அல்லது அருகில் இருக்கும் நகரங்களையும் தேர்வு செய்யலாம்.
180 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறும். இயற்பியல், வேதியியல், உயிரியல்(தாவரவியல் மற்றும் விலங்கியல்) ஆகியவற்றில் இருந்து வினாக்கள் கேட்கப்படும். ‘ஆப்ஜெக்டிவ்’ முறையில் (ஒரு கேள்விக்கு 4 பதில்கள் கொடுக்கப்பட்டு, அதில் சரியான ஒன்றை தேர்வு செய்ய வேண்டும்) இருக்கும்.
மேலும் அறிவிப்பு மற்றும் பாடம் தொடர்பான தகவல்களுக்கு www.ntaneet.nic.in, www.nta.ac.in, www.mciindia.org என்ற இணையதளத்துக்கு சென்று தெரிந்துகொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘நீட்’ தேர்வை சி.பி.எஸ்.இ. நடத்தி வந்த நிலையில், கடந்த ஆண்டு தேர்வு வினாக்களில் பல்வேறு குழப்பங்கள் எழும்பின. அதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டு முதல் தேசிய தேர்வு முகமை(என்.டி.ஏ.) நீட் தேர்வை நடத்த இருக்கிறது. அதேபோல், கடந்த முறை நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆதார் எண் தேவை என்று அறிவிக்கப்பட்டதால் மாணவர்களும், பெற்றோர்களும் கடும் அவதிப்பட்டனர். ‘நீட்’ தேர்வுக்கு ஆதார் எண் தேவையில்லை என்று சுப்ரீம் கோர்ட்டு அறிவித்ததை தொடர்ந்து, விண்ணப்பிக்க ஆதார் அவசியம் இல்லை.
மேலும், கடந்த காலங்களில் ‘நீட்’ தேர்வு காலை காலை 10 மணி முதல் 1 மணி வரை நடைபெற்றது. காலையில் தேர்வுக்கு வருபவர்கள் அவசர அவசரமாக வந்து தேர்வு எழுதுவதை தவிர்க்கும் விதமாக இந்த ஆண்டு பிற்பகல் 2 மணி முதல் 5 மணி வரை நீட் தேர்வு நடத்தப்பட இருக்கிறது.

Related Tags :
Next Story