கனமழை காரணமாக நாகை, திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை


கனமழை காரணமாக நாகை, திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை
x
தினத்தந்தி 2 Nov 2018 1:33 AM GMT (Updated: 2018-11-02T07:27:56+05:30)

கனமழை காரணமாக திருவாரூர், நாகை, புதுக்கோட்டை மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

திருவாரூர், 

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை நேற்று துவங்கியது. இதன் காரணமாக நேற்று  முதல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்யத்துவங்கியுள்ளது. காவிரி டெல்டா மாவட்டங்களில் விடிய விடிய மழை பெய்து வருகிறது. 

இந்த நிலையில், திருவாரூர் மாவட்டத்தில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக  மாவட்ட ஆட்சியர் நிர்மல்ராஜ் அறிவித்துள்ளார். அதேபோல், நாகை மாவட்டத்திலும் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலும் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

Next Story