தமிழகத்தில் 2 நாட்களுக்கு அநேக இடங்களில் மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்


தமிழகத்தில் 2 நாட்களுக்கு அநேக இடங்களில் மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்
x
தினத்தந்தி 2 Nov 2018 7:18 PM IST (Updated: 2 Nov 2018 7:18 PM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் 2 நாட்களுக்கு அநேக இடங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


சென்னை, 

வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் நேற்று தொடங்கியதாக தெரிவிக்கப்பட்டது. தென் மாவட்டங்கள் மற்றும் பிற பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை இயல்பை விட அதிகம் பெய்யும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் 2 நாட்களுக்கு அநேக இடங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் ஸ்டெல்லா பேசுகையில்,  

வளிமண்டல காற்றில் மேலடுக்கு சுழற்சி தென்தமிழகம் மற்றும் குமரி பகுதியில் நிலவுவதால் அடுத்த 2 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அநேக இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யும். சென்னையில் அடுத்த 24 மணிநேரத்தில் அவ்வப்போது வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில நேரத்தில் லேசானது முதல் மிதமான மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும். அடுத்த 2 நாட்களுக்கு மீனவர்களுக்கான எச்சரிக்கை எதுவும் இல்லை.

இதன் தொடர்ச்சியாக தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் 6–ந் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருக்கிறது என்று தெரிவித்துள்ளார். 


Next Story