20 தொகுதிகளுக்கான அ.தி.மு.க தேர்தல் பொறுப்பாளர்கள் கூட்டம், எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர் செல்வம் பங்கேற்பு


20 தொகுதிகளுக்கான அ.தி.மு.க தேர்தல் பொறுப்பாளர்கள் கூட்டம், எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர் செல்வம் பங்கேற்பு
x
தினத்தந்தி 3 Nov 2018 6:58 AM GMT (Updated: 3 Nov 2018 6:58 AM GMT)

இடைத்தேர்தலை எதிர்நோக்கியுள்ள 20 தொகுதிகளுக்கான அ.தி.மு.க தேர்தல் பொறுப்பாளர்கள் கூட்டம் நடந்து வருகிறது.

சென்னை

சென்னையில் முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆகியோர் தலைமையில், அதிமுக தேர்தல் பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது. திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிகள் காலியாக இருப்பதோடு, தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்கள் தொகுதிகளுக்கும் விரைவில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, கடந்த 29ஆம் தேதி, 20 தொகுதிகளுக்கும் தேர்தல் பொறுப்பாளர்களை அதிமுக நியமித்தது. ஆண்டிபட்டி, பெரியகுளம் ஆகிய தொகுதிகளுக்கு துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ் உள்ளிட்டோர் தேர்தல் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டதோடு, அனைத்து அமைச்சர்களும் பல்வேறு தொகுதிகளுக்கு தேர்தல் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டனர். இதையடுத்து, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், தேர்தல் பொறுப்பாளர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது.

இதில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றுள்ளனர். 

Next Story