மாநில செய்திகள்

டெங்கு காய்ச்சலுக்கு பிளஸ்-2 மாணவி பலி + "||" + Plus 2 student dies for dengue fever

டெங்கு காய்ச்சலுக்கு பிளஸ்-2 மாணவி பலி

டெங்கு காய்ச்சலுக்கு பிளஸ்-2 மாணவி பலி
டெங்கு காய்ச்சலுக்கு வெம்பாக்கம் பகுதியை சேர்ந்த பிளஸ்-2 மாணவி ஒருவர் பலியானார்.
ராணிப்பேட்டை,

திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் வேலு. இவரது மகள் பூஜா (வயது 16), ராணிப்பேட்டையில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் விடுதியில் தங்கி பிளஸ்-2 படித்து வந்தார். அவருக்கு கடந்த 3-ந் தேதி காய்ச்சல் ஏற்பட்டது. இதனையடுத்து அவர் ராணிப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவரை பரிசோதனை செய்தபோது டெங்கு காய்ச்சல் இருப்பது தெரியவந்தது. உடனடியாக மாணவியை அவரது பெற்றோர் சென்னையில் உள்ள அரசினர் மருத்துவமனையில் மேல்சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மாணவி பூஜா நேற்று முன்தினம் இறந்து விட்டார்.

இது குறித்து ராணிப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. முக்கொம்பு காவிரி ஆற்றில் மூழ்கி மாணவி பலி தோழியின் தங்கையை காப்பாற்ற முயன்றபோது பரிதாபம்
முக்கொம்பு காவிரி ஆற்றில் மூழ்கிய தோழியின் தங்கையை காப்பாற்ற முயன்ற மாணவி, தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.
2. புலிவலத்தில் நாய்கள் கடித்து புள்ளி மான் பலி தண்ணீர் தேடி வந்தபோது பரிதாபம்
புலிவலத்தில் நாய்கள் கடித்து குதறியதில் புள்ளி மான் ஒன்று பரிதாபமாக இறந்தது.
3. திருவள்ளூர் அருகே இருவேறு விபத்துகளில் 2 பேர் பலி
திருவள்ளூர் அருகே இருவேறு விபத்துகளில் 2 பேர் பலியானார்கள்.
4. மாலியில் ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் 16 வீரர்கள் பலி
மாலியில் ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 16 வீரர்கள் பலியானார்கள்.
5. மோட்டார் சைக்கிள் விபத்தில் பலியான ஓட்டல் உரிமையாளர் குடும்பத்திற்கு ரூ.24 லட்சம் நஷ்டஈடு தேவகோட்டை கோர்ட்டு உத்தரவு
மோட்டார் சைக்கிள் மோதல் விபத்தில் பலியான ஓட்டல் உரிமையாளர் குடும்பத்திற்கு ரூ.24 லட்சம் நஷ்டஈடு வழங்க தேவகோட்டை கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.